Saturday, November 28, 2009

அச்சம் தவிர்ப்போம் ...வெற்றி சிகரத்தை தொடுவோம் ....



"எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சமும் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும் மதிப்பு இருப்பதில்லை ! ஏனென்றால் அச்சம் மதிப்பை விட அகண்ட தளத்தில் விரிந்திருக்கிறது என்று ஊகிக்கலாம்." "ஏனென்று சிந்தித்து வியப்புறுவதில்தான் ஒருவனுக்கு ஞானம் பிறக்கிறது." என்கிறார் தத்துவ ஞானி சாக்ரடிஸ்.
அச்சம் என்பது பற்றி சக்ரடிசின் வார்த்தையை கவனியுங்கள் .அச்சம் தான் விரிந்து கிடக்கிறது.ஏன் அச்சம் என்பதை பற்றி சிந்திக்கும் போது ஞானம் வருகிறது .எனவே நாம் அச்சத்தை தவிர்க்க வேண்டும் .அச்சம் தவிர்த்து சுய பரிசோதனை செய்ய முற்படவேண்டும் .அச்சமில்லை ..அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே ..உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் என்றார் சுப்பிரமணிய பாரதி ..
ஒருமுறை இரண்டு நண்பர்கள் கானகம் வழியே நடந்து வந்துகொண்டு இருந்தனர்.திடீரென ஒரு புலி அவர்கள் முன்னால் வந்தது.இருவரும் பயப்படவே இல்லை .தைரியமுடன் புலிக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.அவர்கள் மேல் பாய வந்த புலி அப்படியே நின்றுவிட்டு பின்னால் நகர்ந்து சென்று விட்டது.எனவே சோதனையை எதிர் கொள்ளும் போது அச்சம் கொண்டால் அது மடத்தனம் .
எனவே நாம் அச்சம் தவிர்க்க முற்படும் போது மனதில் கம்பீரம் வருகிறது.அந்த கம்பீரத்தால் மனதுக்குள் ஒரு எழுச்சி ஏற்படுகிறது .அந்த எழுச்சியால் ஏற்படும் வேகம் நம்மை வெற்றியாளனாக மாற்றும் .

அச்சம் தவிர்ப்போம் ...
வெற்றி சிகரத்தை தொடுவோம் ....

No comments:

Post a Comment