Wednesday, December 22, 2010

நாவடக்கம்


“பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். அந்த யானையின் துதிக்கையில் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கியிருந்தான் பாகன்.

ஒரு நாள், போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டிருந்த ஆயுதங்களில் ஒன்று கீழே விழுந்ததும், அதை எடுக்க… அதுவரை வளைத்து வைத்திருந்த துதிக்கையை நீட்டியது யானை. இதைக் கண்ட பாகன், துதிக்கையின் மீது எதிரிகள் ஈட்டியை எறிவதற்குள் விரைவாகக் களத்தில் இருந்து அந்தக் களிறை வெளியேற்றினான். அரண்மனையில் அரசனைச் சந்தித்த பாகன், ‘அரசே, நம் யானை இன்று போர்க்களத்தில் தனது துதிக்கையை நீட்டிவிட்டது. இனி அது போருக்குப் பயன்படாது’ என்றான்.

ராகுலா! மனிதர்கள் தங்கள் நாவை அடக்கும் வரை நன்மை அடைவர். துதிக்கையைச் சுருட்டி வைக்கும் வரைதான் யானைக்குப் பாதுகாப்பு. நாவைக் கட்டுப்படுத்திப் பொய் பேசுவதைத் தவிர்த்தால்தான் தீமையில் இருந்து மனிதருக்குப் பாதுகாப்பு என்றார் புத்தர்.

மனதில் மாசு இருந்தால்தான் நாக்கு பொய் பேசும். மனதை அடக்காமல் நாக்கை அடக்குவதால் நன்மை இல்லை.

நன்றி :கொல்லிமலை ஆனந்தன்

Tuesday, December 21, 2010

கனவில் தொடங்கிய பயணம்


கனவில் தொடங்கிய பயணம்

அகிலத்தை அதிர வைத்த பல திட்டங்களைப் போலவே, அரவிந்த் கண் மருத்துவமனையும் ஒரு கனவில் தொடங்கிய பயணம். ‘இந்தியாவில் பலரும் தேவையே இல்லாமல் பார்வையை இழந்திருக்கிறார்கள்; அதைச் சரிசெய்ய வேண்டும்! என்று கனவு கண்டவர், ஒரு முன்னாள் பேராசிரியர். மெலிந்த உருவம் கொண்டவர். மதுரை மருத்துவக் கல்லூரியில் கண் நோய் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’. (நாம் எல்லோரும் அறிந்ததே. ஓய்வு பெற்ற பிறகு ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று…)

ஒரு ஒடிசலான முதியவரின் கனவுக்கு உலகத்தையே அசைக்கும் சக்தி இருந்திருக்கிறது என்றால்? நாம் இன்னும் கனவு காணாமல் இருப்பதற்கு என்ன காரணம்? நமக்கு வயதாகிவிட்டது என்பதா? ஓய்வு பெற்றுவிட்டோம் என்பதா? இப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கிறோம் என்பதா? நமக்கு அதிகாரமே இல்லையா? நாம் இருப்பதிலேயே கடைநிலை ஊழியரா? உடல்நிலை ஒத்துழைக்காது என்பதா? மனநிலையா?

இதெல்லாம் வழக்கமாக மற்றவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொள்ள நாம் சொல்லும் காரணங்கள். நம் திறமைகளையும், திறன்களையும் முழு அளவில் பயன்படுத்தாமல் இருக்கச் சொல்லப்படும் சாக்குகள். ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள். ஐம்பத்தாறு வயதில் அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஆரம்பித்து, உலகப் புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவ மனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

நம்மில் பலபேர் இந்த வயதில் “ஓய்வு பெற்று விட்டேன்” என்று சொல்லிக்கொண்டு சாய்வு நாற்காலியில் சரிந்திருப்போம். அரவிந்தின் வாழ்க்கை முறை என்ன? “நாம் என்ன செய்கிறோமோ, அதைத்தான் நமது பணியாளர்களும் பின்பற்றுவார்கள்”. நாளாவட்டத்தில் அது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ‘இதைச் செய், அதைச் செய் என்று உத்தரவு மட்டுமே போட்டுக்கொண்டிருந்தால் அந்த நேரத்துக்கு அதைச் செய்வார்கள். ஆனால் சீக்கரமே எல்லாம் மறந்துவிடும். எப்போதுமே நாமே உதாரணமாக இருந்து வழிகாட்டுவதுதான் நிலைக்கும்’.

அரவிந்தின் மூத்த மருத்துவர்கள், எதையும் தாங்களே முன் நின்று செய்வார்கள். தாமே உதாரணமாக இருந்து வழி நடத்துவது என்பதுதான் அரவிந்தின் நாடித்துடிப்பு. ‘நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதைத் தனியாக ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தினம் தினம் நேரம் தவறாமல் வருவதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்; அதையே பின்பற்றத் தொடங்குகிறார்கள். மருத்துவமனையில் எங்காவது தூது தும்பு தென்பட்டால் நாங்களே அதைத் துடைப்போம். ஏதாவது கீழே விழுந்தால் நாங்களே குனிந்து பொறுக்கிப் போடுவோம். இதைக் கவனிக்கும் ஊழியர்களும் அச்சாக அதையே செய்கிறார்கள். நம்மை நாமே தொடர்ந்து சுயபரிசோதனை செய்து கொள்வதும், அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதும் அரவிந்தின் வாழ்க்கை முறைகள்’!

பலசுவாரஸ்யமான முரண்பாடுகள்! இவர்கள் மிகவும் மென்மையான மனிதர்கள்; ஆனால் வேலை என்று வந்துவிட்டால் அடிமை போலப் பிழிந்தெடுத்துவிடுவார்கள். அதே சமயம், தானே முதல் ஆளாகக் களத்தில் நின்று உழைப்பார்கள். தங்கள் ஊழியர்களின் மேல் நிறைய அக்கறை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவர்களைத் தத்தம் திறமையின் எல்லைவரைப் போய் நிற்க விரட்டுவார்கள். அந்த எல்லையைத் தொட்ட பிறகு ‘இன்னம் கொஞ்சம் ஓடு!’ என்பார்கள். மனிதர்களைப் பின்னாலிருந்து செலுத்திச் செலுத்தி, சாதிக்க முடியாத சாதனைகளைச் சாதிக்க வைப்பார்கள்.

அரவிந்தின் ‘பேராசை’ அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இது வரை எவ்வளவு செய்து முடித்திருக்கிறோம்’ என்பது முக்கியமல்ல; இன்னும் எவ்வளவு மீதியிருக்கிறது? என்பதுதான் அவர்கள் அளவுகோல். இந்தியாவில் பார்வையின்மையை ஒழிப்பது என்பதில் ஆரம்பித்து, இப்போது உலக அளவிலேயே அதைச் செய்வது என்ற இலக்கை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

அரவிந்தின் கதையிலிருந்து ஒரு முக்கிய பாடம் கிடைக்கிறது என்றால், அது ‘அகிலத்தை நம்மாலும் அசைக்க முடியும்’ என்பதுதான். எல்லாமே ஒரு கனவிலிருந்துதான் ஆரம்பமாகிறது. ‘யாராக இருந்தால் எனக்கென்ன? என்று அலட்சியம், எது நடந்தால் எனக்கென்ன என்ற மனநிலையும், அந்தக் கனவின் கை கால்கள்’.

அரவிந்த் கண் மருத்துவமனை சாதனை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்:

  • 24 இலட்சம் கண் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
  • 2,86,000 காடராகட் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன ஒரு வருடத்திற்கு.
  • உலகத்திலேயே பெரிய கண் சிகிச்சை கல்வியகம் ஹார்வாட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ், யேல் போன்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கழைலக்கழகங்களின் மாணவர்கள் பயிற்சிக்காக வருமிடம்.
  • அறுவை சகிச்சை செய்து கண்ணுக்குள்ளேயே பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்சுகள் (IoL) சந்தைக்கு வந்தபொழுது இதன் விலை 5000 ரூபாய். இந்த லென்சுகளை தாமே உற்பத்தி செய்து 200 ரூபாய்க்கு விற்று, உலகின் IOL லென்சுகள் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்த நிறுவனம்.
  • தொண்டு நிறுவனங்களுக்காக மட்டும் 60 இலட்சம் லென்சுகளை தயாரித்திருக்கிறார்கள்.
  • இந்தியா மட்டுமின்றி உலகின் 85 நாடுகளுக்கு IOL லென்சுகளை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனம்.
  • இங்குள்ள ஒவ்வொரு மருத்துவரும் வருடத்துக்க 2000 அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள்.
  • ஒவ்வொரு மருத்துவரும் ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அதுவும் காலை ஏழுமணி முதல் முற்பகல் வரை மட்டுமே. பிற்பகலில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. அறுவை சிகிச்சை அறையை சுத்தப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயாராக்குவதற்காக இந்த இடைவெளி.

குறைந்த லாபம். நிறைவான சேவை!!!

Saturday, December 11, 2010

ஒரு பிறவி பலமுறை வாழ்தல்


கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் – நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்!

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனிதவடிவில் தெய்வம்!!

மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள். இறுதியல் சாதனைகள்! ஒரு பிறவியைய் எடுத்து அதில் ஒரு வாழ்க்கையைய் வாழ்வதில் நாம் இவ்வளவு சோதனைகளை சாதனைகாளக மாற்றுகிறோம். இப்படிப்பட்டதொரு வாழ்க்ககையைய் வாழ்கின்ற நம் மத்தியல் ஒரு பிறவியல் பலமுறை வாழ்ந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் அனைவரும் ‘மனித வடிவில் தெய்வமானவர்கள்’ என்றே கூறலாம்!!

  • சர் கிறிஸ்டோஃபர் ரென் 17ம் நூற்றாண்டிலவ் வாழ்ந்தவர். இவர் இந்த 17ம் நூற்றாண்டில் இரண்டு முறை வாழ்ந்திருக்கின்றார்.

முதல் வாழ்க்கைகுழந்தைப் பருவ வளர்ச்சி, நல்ல கல்வி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வான் இயல் பேராசிரியர் வேலை. முதல் வாழ்க்கை நாற்பத்தெட்டு ஆண்டுகள் நீடித்தது. பிறகு புதிய மாறுபட்ட வாழ்க்கை வாழ்வது என தீர்மானித்தார். வானிவியல் நிபுணராக இருந்து தூரத்திலிருந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, வான் உலகத்தையே பூமிக்குக் கொண்டுவந்து அழகான தேவாலயங்களை நிர்மாணிப்பது என முடிவெடுத்தார்.

இரண்டாவது வாழ்க்கைஅடுத்த நாற்பத்தெட்டு ஆண்டுகளில், ஐம்பத்து மூன்று தேவாலயங்களை நிர்மாணிப்பதில் செலவிட்டார். அந்த தேவாலயங்கள் அவருடைய பெருமையின் நினைவுச் சின்னங்களாக கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் போல் “நான் நிரந்தமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!” இன்றும் நிலைத்து நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல். அந்த மிகப்பெரிய தேவாலயம் இன்றைக்கும் அவருடைய புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

  • டாக்டர் ஆல்பார்ட் ஸ்வைட்ஸர் – தத்துவ சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்கிற நிலையில் பல அறிவு விளக்க நூல்களை எழுதியிருக்கிறார். இது இவரது முதல் நிறைவான வாழ்க்கையின் அடையாளம்!!!

பிறகு மதத்துறையில் ஒரு புதிய வாழ்க்கையினை தேடினார். மத சம்பந்தப்பட்ட தத்துவங்களை பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். மத போதகராகி இரண்டாவது புதிய வாழ்க்கையினை தொடங்கினார். பிறகு, சங்கீதத்தை போதித்தார். அதைப் பயின்றார். சங்கீதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். உலகப் புகழ் பெற்ற ‘சங்கீத மேதை’ என்கிற சிறப்புக்கும் உரியவரானார். சங்கீதத் துறையிலும் சிறப்பினைப் பெற்ற இவர் தனது மூன்றாவது வாழ்க்கையுடன் நிறுத்தவில்லை.

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் நாகரிகமற்ற மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். மருத்துவத்துறை பற்றியும் அறுவை சிகிச்சை பற்றியும் பயிலலானார். நான்காவது முறையாக, மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். சங்கீத மேதை என்கிற புகழை உதறி எறிந்து விட்டு நான்காவது வாழ்க்கையினைத் தொடங்கினார். ஆப்பிரிக்காவில் உள்ள லம்போர்னியாவில் உள்ள காடுகளில் நான்காவது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. மலைப்பாம்புகள், கொரிலாக்கள், முதலைகள், காட்டுமிராண்டிகள் வசிக்கின்ற ராட்சஸ காடுகளை அழித்து அங்கு வசிக்கின்ற மக்களுக்கு மருத்துவவசதி செய்ய மருத்துவமனை ஒன்றையும் கட்டினார். தனது நான்காவது வாழ்க்கையினை அந்த காட்டிலேயே அமைத்துக் கொண்டு தெய்வீக மயமானார்.

“நிகழ்காலத்திலேயே சிக்கித் தடுமாறுகிறீர்கள் என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அது ஒரு அறிவுப் பூர்வமான வாசகம்”. பலரும் ஒரே ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அதையும் வெற்றியாக்கிக் கொள்வதில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

“வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமே!

வாழக் கற்றுக் கொள்வோம்.

நமது இப்போதைய வாழ்க்கையிலேயே சிக்கித் தடுமாறாமல் இருப்பதற்கான

வாழ்க்கையைய் வாழக் கற்றுக் கொள்வோம்.”!!