நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Friday, November 20, 2009
வெறுமை -வாழ்க்கையில் தவிர்ப்போம்
நம்மில் பல பேருக்கு நாம் என்ன செய்கிறோம் ,,நமது வாழ்கையின் நோக்கம் என்ன என்பது தெரிவதில்லை .ஏதோ பிறந்தோம்..ஏதோ வளர்கிறோம் என்றே நினைத்து ஒவ் வொரு நாளையும் கடத்தி கொண்டிருக்கிறோம் .சிலர் இன்னும் விரக்தியாக வாழ்கையே வெறுமையாக இருகிறதே என்று சொல்பவர்களாக இருப்பதையும் பார்க்க முடிகிறது .வாழ்கையே வெறுமையாக இருக்கிறது என்றால் அவர்களால் வாழபடும் வாழ்கையில் திருப்தி இல்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டிஇருக்கிறது.நாம் வாழுகின்ற வாழ்க்கை மகிழ்ச்சி உடையதாய் அமையவேண்டும் .அந்த மகிழ்ச்சியால் வருகின்ற பலன்களால் உங்கள் மனதின் வெறுமையை களையவேண்டும் .
ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான் .அவன் எந்த வேலையும் செய்யமாட்டான் .சாப்பிடுவது தூங்குவது என்று தினவும் பொழுதை கழிப்பான்.அவனுடைய வயதான பாட்டி ஏதோ கூலி வேலை செய்து அவனுக்கு சாப்பாடு போட்டு கொண்டிருந்தாள் .திடிரென பாட்டி உடம்பு முடியாமல் படுத்த படுக்கையானாள்.சோம்பேறிக்கு சாப்பாடு போட ஆளில்லை .அப்போது அந்த ஊரில் ஒரு துறவி வந்து உபதேசம் செய்து கொண்டிருந்தார் .அப்போது அந்த ஊர்மக்கள் அந்த சோம்பேறியிடம் உனக்கு சாப்பாடு போட யாருமில்லை .நமது ஊரில் ஒரு சக்திவாய்ந்த துறவி ஒருவர் வந்திருக்கிறார் .நீ அவரை சென்று தரிசித்தால் உனக்கு ஆயுள் முழுக்க சாப்பாடு கிடைக்கும்.அவனும் சரி என்றபடி துறவியை பார்க்க புறப்பட்டான் .துறவி இவனை பார்த்து "மகனே உனக்கு என்ன வேண்டும் " என்றார் .
"சாமி எனக்கு காலம் முழுக்க வேலை செய்யாமல் சாப்பிடவேண்டும்" என்றான். "சரி மகனே அதற்கு முன்னால் நீ ஒன்று செய்யவேண்டும் .நான் உன்னிடம் ஒரு சின்ன மூடையை தருகிறேன் .நீ இதை தூக்கிகொண்டு இரண்டு மைல்கள் நடக்க வேண்டும் "என்றார்.சோம்பேறிக்கு மூடையை தூக்கி நடப்பதற்கு கஷ்டமாக தான் இருக்கும் .இருந்தாலும் காலம் முழுக்க சாப்பாடு கிடைக்கும் என்று ஒப்புகொண்டான் .
துறவி அவனுக்கு தெரியாமல் அந்த மூட்டையில் பலவிதமான தாவரங்களின் விதைகள் மற்றும் நெல் தானிய விதைகளை நிரப்பினார் .அந்த மூட்டையில் சிறு சிறு துவாரங்களை போட்டார் .பிறகு அந்த மூடையை சோம்பேறியிடம் கொடுத்தார் .அவனும் இரண்டு மைல் நடந்து விட்டு மீதி விதையுடன் மூட்டையை திருப்பி கொடுத்தான் ."சாமீ எப்போது எனக்கு சாப்பாடு கிடைக்கும் "என்று கேட்டான் . "போய் இரண்டு மாதம் கழித்து வா " என்றார் துறவி .
இரண்டு மாதம் கழித்து மீண்டும் துறவியை பார்க்க வந்தான் சோம்பேறி.அப்போது துறவி "நீ அந்த மூட்டையுடன் சென்ற வழியை பார்த்துவிட்டு வா "என்றார் துறவி .அவனும் துறவி சொன்னபடியே அந்த வழியே நடக்க தொடங்கினான் .அப்போது அவன் சென்ற வழிகளில் சில செடிகள் பூத்து குலுங்கி இருந்தன.அந்த பூக்களில் அமர்ந்து தேனீக்கள் தேன் குடித்து கொண்டிருந்தன.புல் பூண்டுகள் முளைத்து இருந்தன .அந்த புற்களை மாடு மேய்ந்துகொண்டிருந்தது .ஆனால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .
திருப்பி துறவியிடமே திரும்பினான் அவன் .அவன் கோபமுடன் துறவியை பார்த்து "நீர் எம்மை அவமான படுத்துரீர் " என்றான்
துறவி சாந்தமாய்"மகனே நீ அன்று மூட்டை தூக்கி சென்ற இடமெல்லாம் வளர்ந்த தாவரங்களால் எவ்வளவோ உயிர்கள் வாழ்கின்றன.வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் .உனது வாழ்க்கை வெறுமை ஆகிவிடக்கூடாது .உனக்காக இல்லாமல் பிற உயிர்களுக்காக வாழ்.உனக்கு நிச்சயம் சாப்பாடு கிடைக்கும் " என்றார் .துறவியின் அறிவுரையால் திருந்திய சோம்பேறி இனிமேல் உழைப்பது என்றும் தனது பாட்டியை பராமரிப்பது என்றும் முடிவு செய்தான்.
எனவே வாழ்க்கை என்பதை வெறுமையாக நினைக்க வேண்டாம் .மற்றவர்க்கு தீமை செய்யாமல் முடிந்த அளவு நன்மை செய்தால்வெறுமையானவாழ்க்கையும் நிறைந்த வழக்கையாய் பூத்து குலுங்கும் ..வாழ்த்துகள் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment