Tuesday, November 10, 2009

சமச்சீர் நிலை

நமது வாழ்க்கையானது அனைத்துப் பருவ காலங்களிலும் மலரும் மலரைப் போன்று இருக்க வேண்டும். அப்படியல்லாமல் ஒருவன் வாழ்க்கை வாழ்வானேயானால் அவன் எவ்வளவு பண வசதி பெற்றிருந்தாலும் வாழ்க்கை முடிகின்ற காலங்களில் கல்லறை இல்லாத சுவடுகள் போன்று ஆகிவிடும்.
அனைவரின் கேள்வியும் ஒன்றே எனக்கு புரிகிறது. “எப்படி அனைத்து பருவ காலங்களிலும் மலரும் மலரைப் போல வாழ்வது?”. நமக்கு இரண்டு வகையான கல்வி தேவைப்படுகிறது. ஒன்று, எப்படி நாம் சம்பாதிப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பது. இன்னொன்று, எப்படி வாழ்வது எனபதைக் கற்றுக் கொடுப்பது.
சிலர் தங்கள் செய்யும் தொழிலில் மூழ்கிப் போய், தங்களுடைய குடும்பம், உடல் நலன், சமூகப் பொறுப்புகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்’ என்று கேட்டால் ஆண்கள் தங்களது குடும்பத்திற்காகவே இவ்வாறு செய்வதாகப் பதில் கூறுவார்கள்.
இன்று நிறைய குடும்பங்களில் பெற்றோர்கள் வீட்டை விட்டு போகும் போது குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கின்றனர். மீண்டும் வீடு திரும்பும் போதும் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்திற்காகப் ‘பணம் சம்பாதிக்கிறேன்’ என்ற பெயரில் குடும்பத்தையே பார்க்காமல் குழந்தைகளுக்குத் தேவையான அன்பு, பாசம், இவை எதுவும் இல்லாமல் இறுதியில் பணம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
அவ்வாறு பணத்தைச் சம்பாதித்தவர்களின் நிலை எதிர்காலத்தில் எவ்வாறு இருந்தது பற்றிய கருத்தாய்வு:
1923ல் உலகிலுள்ள பெரிய பணக்காரர்களில் எட்டு பேர் சந்தித்தார்கள். அவர்களுடைய செல்வ வளத்தைக் கூட்டிப் பார்த்தால், அது அந்த நாட்களில் அமெரிக்க அரசின் செல்வ வளத்தை விட அதிகமாக இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இவர்களுக்கு எப்படி பணத்தைச் சம்பாதிப்பது என்பதும், எப்படி பணத்தைச் சேர்ப்பது என்பதும் வெகு நன்றாகத் தெரியும். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
· பெரிய எஃகு கம்பெனியின் தலைவரான சார்லஸ் ஷ்வாப் திவாலாகி இறப்பதற்கு முன்னால் ஐந்து ஆண்டுகள் கடன் வாங்கப்பட்ட முதலை வைத்துக் கொண்டே வாழ்ந்தார்.
· பெரிய பெட்ரோல் எரிவாயு கம்பெனியின் தலைவரான ஹோவர்ட் ஹப்சன், சித்த சுவாதி இல்லாது போனார்.
· பெரிய சரக்குக் கம்பெனியின் தலைவரான ஆர்தர் கடன் பண நெருக்கடியில் நொடிந்து போய் இறந்தார்.
· நியூயார்க் பங்கு சந்தையின் தலைவரான ரிச்சர்ட் விட்னி சிறையில் அடைக்கப்பட்டார்.
· ஜனாதிபதி கேபினட்டில் உறுப்பினரான ஆல்பெர்ட் ஃபால் அகைதியாக இறக்கட்டும் என்று சிறையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
· வால் ஸ்ட்ரீட்(Wall Street) பெரிய புள்ளியான ஜெஸ்ஸி லிவர்மோர் தற்கொலைச் செய்து கொண்டார்.
· உலகின் மாபெரும் வியபார ஏக போக கம்பெனியின் தலைவர் ஐவர் க்ரூகெர் தற்கொலலை செய்து கொண்டார்.
· பன்னாட்டு கடனமைப்பு வங்கியின் தலைவர் லியோன் ஃப்ரேசர் தற்கொலை செய்து கொண்டார்.
இவர்கள் மறந்து போனது “எப்படி வாழ்க்கையை வாழ்வது” என்பதைத் தான்.
“பணம் பசித்தவர்களுக்கு உணவையும், நோயாளிகளுக்கு மருந்தையும், தேவைப்படுவர்களுக்கு துணிகளையும் தரும் பண்டமாற்றத்திர்க்கான ஒரு வழியே அன்றி வாழ்வதற்கான மூச்சுக்காற்றில்லை”.

No comments:

Post a Comment