Wednesday, November 11, 2009

புகழ் பெற்ற மனிதர் வாழ்வில்

ஒரு மனிதன் புகழ் பெற்று விட்டால் அவனுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.நேற்று சைக்கிளில் போனான்.இன்று காரில் போகிறான்.நேற்று நூறு ரூபாய் கடன் கேட்டான்.நான் கொடுக்கவே இல்லையே.இன்று அவன் நிலைமை என்று கடன் தர மறுத்தவன் புலம்புவான்.பணம் மட்டும் இருப்பதால் புகழ் வருவதில்லை .அனைவரிடமும் நட்புடன் பேசுவது,உதவிகள் செய்வது ,அன்பு காட்டுவது,குறிப்பாக எந்த நேரத்திலும் சந்திப்பதற்கு எளியவராக இருத்தல் போன்ற நல்ல குணங்களால் தான் ஒருவன் புகழ் அடைகிறான்.

"என்ன அருமையான மனுஷன் அவர் ".

"மனுஷன் எவ்வளவு பெரிய ஆள் .எப்படி எளிமையா இருக்கார் .எவ்வளவு அன்பா பேசுகிறார் " என்று உங்களுக்கு தெரியாமல் பேசப்படும் வார்த்தைகள் உங்களை புகழ் உச்சிக்கு கொண்டு செல்லும்.இப்போது புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒற்றை பார்ப்போம்

புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ''நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்'' என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர். அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ''என்ன... கடவுள் ஏதாவது சொன்னாரா?'' என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.

உடனே புக்கர் டி வாஷிங்டன், ''இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், 'நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?' எனக் கேட்டு விட்டார்'' என்றாராம்

2 comments:

  1. அனைத்தும் அருமை

    ReplyDelete
  2. தங்களுடைய கருத்துரைக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete