நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Thursday, November 12, 2009
நம்பிக்கை -சிறுகதை
அவன் பொறந்தது வளர்ந்தது எல்லாம் ஒரு கிராமத்தில் .அந்த கிராமம் பாரதிராஜா படத்தில் வரும் மாதிரி கோவணம் கட்டிக்கிட்டு கையில் ஒரு கம்புடன் கரிசல் காட்டில் நடந்து செல்லும் மனிதர்களை பார்த்தது இல்லை.எல்லோரும் நாகரிகம் தெரிந்தவர்கள ய் இருந்தார்கள் .அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் அவள் வீட்டிற்கு மின்சாரம் வந்தது.
அவனுக்கு என்று எந்த குறிகோளும் இல்லை.வீட்டிற்கு மின்சார இணைபிற்கு மனு போட்டுவிட்டு மின்வாரிய பொறியாளரை சந்திக்க சென்றான் அவன்.
கடந்த ஒரு மாதங்களாக அவன் பலமுறை சந்தித்தும் இன்னும் மின்சாரம் கிடைத்த பாடில்லை. நினைத்தவுடன் அவரை பார்க்க முடியவில்லை.அவரை சந்திக்க காத்திருக்க வேண்டி இருந்தது.அவனுக்கு முன்னால் வெள்ளை வேட்டி சட்டையணிந்த அந்த ஊர் பெரிய மனிதரும் காத்து இருக்கிறார்.அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.அவர் அரசின் இலவச மின்சாரத்திற்காக தான் விண்ணப்பம் கொடுக்க வந்து இருக்கிறார் என்பதில் தெரிந்து கொண்டான் .நான் மட்டும் கொஞ்சம் நிலம் இருந்து அதில் விவசாயம் செய்ய இலவச மின்சாரம் தருவார்களா ? என்று தனக்கு தானே கேட்டு கொண்டான் .
பொறியாளரின் அறை கதவில் ராமகிருஷ்ணன் B.E,இளநிலை பொறியாளர் என்ற போர்டு தொங்கியது. அந்த போர்டு பார்த்தும் அவனுக்கு பெரிய மனிதரும் அந்த போர்டும் தான் அவனுக்கு இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆசையை உண்டாக்கியது .நாளைக்கு நாமும் இதே மாதிரி ஒரு பொறியியல் பட்டம் பெற்றால் இதே போல் பெரிய மனிதர்கள் தன்னை காத்திருந்து பார்ப்பார்களே என்ற ஒரு நப்பாசை தான் . ஒரு வழியாக சென்னையில் இன்ஜினியரிங் படித்து அரியருடன் நான்கு ஆண்டையும் முடித்துவிட்டான்.
அடுத்து அவனுடைய இலக்கான இளநிலை பொறியாளர் அவ்வளவு ஈஷி ஆக கிடைக்குமா ?அரியருடன் போனால் எவன் வேலை கொடுப்பான்..நண்பர்கள் நால்வராக சென்னை கொரட்டூரி ல் தங்கி வேலை தேட ஆரம்பித்தான்.அப்புறம் எதோ சிபாரிசில் ஒரு கம்பெனியில் மூன்றாயிரம் ரூபாயில் ஒரு வேலை கிடைக்க அவன்தான் ஹீரோ ஆகிவிட்டான் .ஏனென்றால் இவன் சம்பளம் அவனுங்களை விட அதிகம்.
"உனக்கென்ன மச்சி நீ நம்மளை விட அதிகமா வாங்கிரியே" என்று சொன்னான் ஒருவன்.மற்றவன் "அவனுக்கு என்னடா இன்னும் கொஞ்சம் நாளில் எங்கயோ போக போகிறான் "என்றான் .
அவனுக்கு கொஞ்சம் நாட்களில் அந்த வேலையும் பிடிக்காமல் போக அடுத்து போனது மார்கெட்டிங் வேலைக்கு . அதுவும் பிடிக்காமல் போக அவனுக்கு வாழ்க்கை பிடிப்பில்லாமல் ஆகி போனது
அவன் நண்பன் சொன்னது இப்போபோதுதான் புரிந்தது."பாவிபய எங்கேயோ போவான் என்று சொன்னது தெருகோடியை தானா "என்று மனதுக்குள் புலம்பினான் .இப்போது அவன் அரியர்ஸ் எல்லாம் பாஸ் செய்து விட்டு சூழ்நிலை கைதியாய் ஏதோ வேலை செய்து கனவுடன் நம்பிக்கையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் .
இதே போல் எத்தனையோ அவன்கள் சென்னை வீதிகளில் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஏதோ நினைத்து படித்து ஏதோ ஒரு வேலை பார்த்து சூழ்நிலை கைதியாய் குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள் .தெளிவான சிந்தனை,கடுமையான முயற்சி,எதையும் பரிசோதனை செய்யும் திடமான நம்பிக்கை ஆகியவற்றுடன் முயன்றவர்கள் தோற்றதாய் எந்த சரித்திரமும் சொல்லவில்லை .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment