Wednesday, November 18, 2009

பணிவு கொள் -உயர்வு கொள்வாய்


பணிவு கொள் -உயர்வு கொள்வாய்

நம்மில் பல பேருக்கு பணிவு என்றால் என்ன ?என்பதே தெரிவதில்லை .நான் சிலரை பார்த்து இருக்கிறேன்.எனது தினசரி அலுவலக ரயில் பயணத்தில் சிலர் தன்னை விட வயதுக்கு பெரியவர்கள் காலை மிதிப்பார்கள் .வேண்டுமென்றே மிதிப்பவர்களும் உண்டு .தெரியாமல் மிதிப்பவர்களும் உண்டு .மும்பை போன்ற நகரங்களில் இது தவிர்க்க முடியாது என்பது உண்மை .ஆனால் ஒரு சாரி சொல்வதற்கு அவர்கள் யோசிப்பார்கள்.மிதி வாங்கியவர் கோபத்துடன் பார்ப்பர்.ஒரு சாரி சொல்லிவிட்டால் மிதி வாங்கியவர் முகத்தில் ஒரு புன்னகை தவழும் .இந்த சாரி எல்லாம் கடைக்கு சென்று விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை .எல்லோரிடமும் இருக்கிறது .நாம் அதை சரியாக சொல்லவேண்டிய இடத்தில் சொல்லவேண்டும் .தவறு மேல் தவறு செய்துவிட்டு சாரி சாரி என்று சொல்லுவதால் அடுத்தவர்களிடம் நம்மை பற்றிய நல்லெண்ணம் போய்விடும் .ஒருதடவை தவறு செய்துவிட்டு அதை திருத்தி கொள்வதே அறிவுடைமை .

ஜென் குரு ஒருவர் மல்யுத்த வித்தையிலும் சிறந்து விளங்கினர். அந்தப் பகுதியில் அவரை மல்யுத்தத்தில் வெல்ல யாரும் இல்லை என்னும் வண்ணம் பெயர் பெற்றிருந்தார். அந்த ஊருக்கு வயதில் இளைய மல்யுத்த வீரன் ஒருவன் வந்தான். குருவை மல்யுத்தத்தில் வீழ்த்துவேன் என்று அனைவரிடமும் சூளுரைத்தான். உடல் வலிமை மட்டுமன்றி தந்திரத்திலும் சிறந்து விளங்கியவன் அவன். அவனுடன் மோதுபவர்களின் அசைவுகளை நன்கு கவனித்து முதலில் அவர்களை இயங்கவைத்து எதிரியின் பலவீனத்தைக் குறித்துக் கொண்டு அவர்களை அடித்து வீழ்த்தும் தந்திரத்தைக் கையாண்டு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியையே சந்தித்து வந்தான்.

அவனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியவில்லை.
தன்னுடைய சீடர்களின் அறிவுரைகளை மீறி குரு அந்த இளைஞனுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தார். போட்டி துவங்கியது. இருவரும் எதிரெதிர் நின்றதும் இளைஞன் குருவை நோக்கி மிகவும் மோசமான வசவுகளால் திட்டத் துவங்கினன். அவருடைய முகத்தில் மண்ணை வாரித்தூற்றிக் காரி உமிழத் துவங்கினன். நீண்ட நேரம் அவரைத் தூற்றிக் கொண்டே இருந்தான்.

குருவும் ஒன்றும் சொல்லாது அவன் எதிரில் வெறுமனே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தார். இளைஞனின் திட்டுதல் மணிக்கணக்கில் தொடர்ந்து ஒருவழியாகக் களைப்படைந்து ஓய்ந்து கீழே சரிந்து விழுந்தான்.
சீடர்கள் அனைவரும் குருவைச் சூழ்ந்து கொண்டனர்.

"உங்களை இவ்வளவு தூற்றியும் அவமானப் படுத்தியும் நீங்கள் ஏன் அவனை அடித்து வீழ்த்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தீர்கள்?'' எனக் கோபத்துடன் வினவினர்கள்.


குரு புன்னகையுடன் கேட்டார், "நீங்கள் யாருக்காவது பரிசளிக்க ஏதாவது பொருளை எடுத்துப் போகிறீர்கள். அந்த நபர் அப்பரிசை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்தப் பொருள் யாருடைய உடமையாக இருக்கும்?''


பணிவுடன் நடப்போம் ...மற்றவர் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்வோம்....அப்புறம் நீங்களும் பெரிய மனிதர் தான் ....
--

No comments:

Post a Comment