Friday, October 30, 2009

முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா ?-தொலை தொடர்பு துறை ஊழல்

அறுபதாயிரம் கோடி ரூபாய் கோடி ஊழல் என்கிறார்கள் .ஒருலட்சம் கோடி ஊழல் என்கிறார்கள் ...

நூறு ரூபாய் நோட்டை முழுமையாய் பார்க்க உச்சி வெயிலில் நின்று உழைக்கும் தெருகோடியில் வாழும் சதாரண மனிதன் வாய் பிழந்தபடி ஆச்சிரியமாய் பார்கிறான் .யார் பணத்தை யார் அடிப்பது என்று ?

குப்பனும் சுப்பனும் கட்டும் வரிபணம் கஜானாவில் நிரம்புகிறது .அதிகார வர்க்கத்தினர் குப்பன் மற்றும் சுப்பன் வியர்வையை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் .ஊரான் சொத்தை கொள்ளை அடித்து அதிகார துஸ்பிரயோகம் செய்து பரம்பரைக்கு சொத்து சேர்க்கிறார்கள் .விளைவு ஊழலில் உலகில் இந்தியாவுக்கு எழுபத்தி இரண்டாவது இடம்.நாம் வளரும் நாடு ...நாம் நமது இலக்கை அடைய இந்த பட்டியலில் கடைசியில் அல்லவா இருக்க வேண்டும் .உலகின் வேகமான GDP வளர்ச்சியில் இரண்டாம் இடம் .ஊழல் இல்லாத நாடு பட்டியலில் இந்தியா இருந்தால் எப்படி இருக்கும் ? நினைக்கும் போதே மெய் சிலிர்கிறது .

இந்த பாழா போன அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் இந்தியா அந்த பட்டியலில் வர எப்படி விடுவார்கள்?அதுதான் மீண்டும் ஒரு ஊழலால் சந்தி சிரிக்கிறதே ...தொலைதொடர்பு துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல் .கடந்த வருடம் தொலை தொடர்பு துறையில் இரண்டாம் தலை முறைக்கான 2 G அகண்ட அலைவரிசை வழங்கியதில் தான் இத்தனை முறைகேடுகளும்.

திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சரான ராஜா தலைமையில் இயங்கும் தொலை தொடர்பு துறை ,தொலை தொடர்பு துறையில் துளிகூட சம்மந்தம் இல்லாத கட்டுமான துறை நிறுவனங்களான யூனீ டெக் மற்றும் லெட்டர் பேடு கம்பெனியாக இருக்கும் சுவான் போன்ற கம்பெனி களுக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன ?

மிகவும்
அடிமாட்டு விலைக்கு ஒப்பந்தபுள்ளி கோராமல் சுவான் கம்பனிக்கு பதிமூன்று தொலை தொடர்பு வட்டங்களுக்கு வெறும் ஆயிரத்து ஐநூற்று முப்பத்தி ஏழு கோடிக்கும் யூனீடெக் நிறுவனத்திற்கு இருபத்தி இரண்டு தொலை தொடர்பு வட்டங்களுக்கு ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஓன்று கோடி ரூபாய்க்கும் வழங்க பட்டு இருக்கிறது .

சரி ...போகட்டும் யார் வீட்டு பணமோ ?உரிமம் பெற்ற நிறுவனங்கள் என்ன செய்தன ?அவர்களுக்கு தான் தொலை தொடர்பு துறையில் அனுபமே இல்லையே .அப்புறம் எப்படி உரிமத்தை பயன்படுத்துவது ... சுவான் தனது உரிமத்தில் நாற்பத்து ஐந்து சதவீதத்தை துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Etisalat என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கும்
யூனீடெக் தனது அறுபது சதவீத உரிமத்தை நார்வே நிறுவனமான Telenor என்ற வெளிநாட்டு கம்பெனிக்கு ஆறாயிரத்து நூற்று பனிரெண்டு கோடி ரூபாய்க்கும் விற்று கொள்ளை லாபம் பெற்று விட்டன .இதில் கம்பனிகள் அடைந்த லாபங்கள் பல ஆயிரகணக்கான கோடிகள்.

இவையெல்லாம் தொலை தொடர்பு துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் தான் நடந்து இருக்குமா ?

இதை ஓபன் டெண்டெர் மூலம் விற்று இருந்தால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்குமா ?

கடந்த வாரம் தொலை தொடர்பு துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் மேலும் சில கம்பெனிகளுக்கும் முறைகேடாக உரிமம் வழங்க பட்டு இருப்பதாகவும் கூறபடுகிறது.

இதை பற்றி தொலை தொடர்பு அமைச்சரிடம் கேட்டால் இதற்கு முன்னால் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் மூலம் உரிமம் வழங்கப்பட்டது என்று கூறுகிறார் .ஆனால் தொலை தொடர்பு துறை அதிகாரிகளோ தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் முடிவு என்கிறார்கள்.

அமைச்சகம்
என்பதன் தலைவர் யார் ?அமைச்சர் தானே ? இதற்கு முன்னால் கடை பிடிக்கப்பட்ட விதிகள் என்று கூறி அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்த தலைமை பொறுப்பில் இருக்க கூடியவர் எப்படி தவறான முடிவை எடுக்கலாம் ?அப்படிப்பட்ட விதிகளை மாற்ற வேண்டாமா ?

இதுதான்
தலைமை பண்பா?தலைமை பொறுப்பில் இருப்பவர் அரசின் வருமானத்தை பெருக்க அல்லவா செய்ய வேண்டும்.

இதற்கு முன்னால் தொலை சுக்ராம் தொடர்பு துறை அமைச்சராய் இருந்த போது நடந்த ஊழலுக்கு இன்னும் தீர்ப்பே இல்லை.

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்கள் வரிசையில் இந்த ஊழலும் சேரபோகிறது.மகா இந்திய குடிமகன்களே இதில் மட்டும் உங்களுக்கு நியாயமான தீர்ப்பு தெரியும் என்று நினைக்கிறீர்கள் ?


இதை எழுதும்போது பட்டுக்கோட்டையார் பாடல் ஓன்று நினைவுக்கு வருகிறது .

பாடுபட்டு காத்த நாடு கெட்டு போகுது
கேடுகெட்ட கும்பலாலே -நீங்க
கேடுகெட்ட கும்பலாலே

சூடு பட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே -பெரும்...சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிகிடும் வீணாராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சக செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்
சூடு பட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே -

Sunday, October 25, 2009

நண்பனுக்கு கடிதம் -2

அன்புள்ள நண்பனுக்கு ,
நலம்.நலமறிய ஆவல் .நீ எனது கடிதத்தை படித்து இருப்பாய் என நம்புகிறேன் .ஏதாவது எழுத்து பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் .நமது சின்ன வயது நிகழ்சிகளை நினைவு கூறும் போது எனது மனம் சந்தோஷத்தில் மிதக்கிறது.நமது ஊர் கோயில் திருவிழாவில் நாம் அரங்கேற்றம் பண்ணிய சமுக சிந்தனையை தூண்டும் நாடகங்கள் பற்றி உனக்கு ஞாபகம் இருக்கா?ஒரு நாடகத்தில் நான் டாக்டர் வேடத்தில் கீழ் சாதி நோயாளிக்கு ஆபரேஷன் பண்ணுவது போலவும் அதற்க்கு மேல் சாதியை சேர்ந்த நீ ரத்தம் கொடுப்பது போலவும் அதன் பிறகு நான் சாதிகள் வேறாயினும் நம் உடம்பில் ஓடும் குருதி ஒரே நிறமே என்று நீண்ட வசனம் பேசியதும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?

என்னதான் நாடு வளர்ந்தாலும் அனைவரும் சமமான கல்வியை பெற்றால் தான் சமுகம் வளரும் .விழிப்புணர்வு பெறும்.இன்றும் பெரும்பாலான தமிழ் நாட்டு கிராமங்களில் சாதி கொடுமை தலைவிரித்து ஆடுகிறது .இன்னும் டீ கடைகளில் இரட்டை டம்ப்ளர் முறை இருக்கிறது என்று கேள்வி படுகிறோம் .இந்த கொடுமைகள் ஒழிய வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி சரியாக கிடைக்க வேண்டும் .

அன்பு நண்பா ! நான் இந்த வாரம் ஒரு வார பத்திரிக்கையில் தோழர்கள் என்ற ஒரு தொண்டு அமைப்பை பற்றி படித்தேன் .அவர்களுடைய பணி மிகவும் என்னை கவர்ந்தது.அவர்கள் அனைவரும் சதாரண வேலையில் இருப்பவர்கள் .தங்களின் ஒய்வு நேரத்தை மற்றவர்களுக்காக தோழமையுடன் செலவு செய்கிறார்கள் .முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் அன்பாக பேசுகிறார்கள்.
அநாதை ஆசிரமங்களுக்கு சென்று குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்கிறார்கள்.அவர்களுக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை செய்கிறார்கள் .உண்மையிலே அவர்கள் தோழர்கள் என்ற சொல்லுக்கு மிகவும் பொரூத்தமானவர்கள்.

அன்பு நண்பா! இந்தியாவிலே வருமானவரி சரியாக கட்டுபவர்கள் யாராக இருப்பார்கள் என்று நீ நினைகிறாய் ?மாத வருமானத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் காமென் மேன் தான் .அரசாங்க வங்கிகள் வழங்கும் தொழில் கடன்கள் அனைத்தையும் வாங்கி தொழில் துவங்கி விட்டு அரசுக்கு நஷ்ட கணக்கை காட்டிவிட்டு கடனையும் திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கிட முடியாது .அண்மையில் சுவிஸ் பேங்க் அமெரிக்காவின் கடுமையான வேண்டுகோளின் படி தனது வங்கியில் டெபாசிட் செய்திருக்கும்தனது வாடிக்கையாளர்களை பற்றிய விவரங்களை வெளியிட்டது.அதில் இந்தியாவின் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும் எழுபது லட்சம் கோடிகளை போட்டு வைத்து இருக்கிறார்கள் .

உலகில் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது.இப்போ உனக்கு தெரிகிறதா யார் சரியாக வருமான வரி செலுத்துகிறார்கள் என்று ?
அன்பு நண்பா ! இந்த பணம் மட்டும் இந்தியாவுக்கு திரும்ப கிடைத்தால் என்னவல்லாம் பண்ணலாம் என்பதற்கு ஒரு சின்ன விளக்கம் . இந்த பணம் இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட பதிமூன்று தடவை அதிகம்.இந்த பணத்தை கொண்டு இந்தியாவின் வெளிநாட்டு கடன் முழுவதையும் அடைத்து விட்டு மீதியிருக்கும் பணத்தை வெளிநாடுகளுக்கு குறைவான வட்டியில் கடன் கொடுத்தால் கூட அந்த வட்டி பணம் நமது மத்திய அரசாங்கத்தின் வருட பட்ஜெட் ஐ விட அதிகம் கிடைக்கும் .இந்த பணத்தை இந்தியாவில் இருக்கும் நாற்பத்தி ஐந்து கோடி ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தால் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் .

நண்பா ! இந்த செய்தியை படிக்கும் போது ஒரு இனம் புரியாத உணர்ச்சி ஏற்படுகிறது.ஆனால் இந்த பணத்தை இந்தியா கொண்டூவர யாரு முயற்சி எடுக்கணுமோ அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் அதை பற்றி மேடைகளில் முழங்குகிறார்கள் .ஆனால் தேர்தல் முடிந்ததும் அதை காற்றில் பறக்க விடுகிறார்கள் ..இதுதான் நமக்கு தெரிந்ததே....

அப்படி அவர்கள் முயற்சித்து இந்தியாவுக்கு கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்கள் வண்டவாளம் தான் தண்டவாளம் ஏறும்.எப்படியோ இந்த பணம் இந்தியாவுக்கு வந்து விட்டால் நம்மை எந்த கொம்பனாலும் ஒன்றும் பண்ண முடியாது என்பது உண்மை .

நண்பா ! இத்துடன் இன்றைய கடிதத்தை முடிக்கிறேன் ...மீண்டும் கடிதம் வாயிலாக சந்திப்போம் .

என்றும் அன்புடன்
கருத்து சுதந்திரம் .

Thursday, October 22, 2009

படிப்போம் வாருங்கள்

இன்றைய சூழ்நிலையில் இயந்திரமான விஞ்ஞான உலகில் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவுடன் அனுதினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் நமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இன்றளவும் அனுதினமும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரங்களில் ஊர் பொது நூலகம் சென்று நூல்களை அல்லது அன்றைய செய்திகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு எல்லா சகல வசதிகளும் வீட்டில் உள்ள கணிப் பொறியிலேயே கிடைக்கிறது. உதாரணமாக, அனைத்து செய்தித்தாள்களும் தங்களது செய்திகளை வலைதளத்தில் இடுகிறது மற்றும் அனைத்து தமிழ்நூல்களும் மின்-புத்தகங்களாக மாறிக் கொண்டே உள்ளன. அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே ஒருங்கே கிடைக்கப் பெற்றும் நம்மில் பலர் தினமும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இல்லை.

நண்பர்களே! நாம் மாறுவோம்!! தினமும் குறைந்தது அரை மனி நேரமாவது நல்ல கருத்துள்ள நீதி நெறி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான நூல்களைப் படிப்பபோம். நாம் படிப்போம். நம் நண்பர்களை படிக்க வைப்போம்!!. நமது இந்த இளைய சமுதாயத்தின் மாற்றம் நம்மிள் நாம் அனைவரும் ‘அறிவுத் தீ’ கனலாக மாறுவோம். ஓர் ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இத்தகைய ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கக்கூடிய கல்வியை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களையும் ஆராய்வோம்.

அதிவீரராம பாண்டியன் தனது ‘வெற்றி வேட்கை’ என்ற நூலில் கூறியது.

“கற்கை நன்றே! கற்கை நன்றே!!

பிச்சை புகினும் கற்கை நன்றே!!”

அதாவது பிச்சை எடுத்தாவது படிப்பினை தொடர வேண்டும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறுவது:

யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

விளக்கம்: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.

காஞ்சிபுரத்திலே பிறந்து, தம் கல்வியால், பேச்சாற்றலால் மற்றம் எழுத்தாற்றலால் தமிழக முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் வாழக்கையே ஒரு சான்று. ஒரு முறை அவர் முதல்வராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அப்பொழுது அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் ‘வெள்ளிக்கிழமை’ அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டு இருந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவே இரண்டு நாட்கள் தள்ளிப் போட கேட்டுக் கொண்டார். காரணம், “நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் அதனை நான் முழுமையாக வாசித்து விடுவேன்” என்று சொன்னார்.

சிறுகூடல் என்னும் கிராமத்தில் பிறந்து, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பை படித்தவர் கவியரசு கண்ணதாசன். இறக்கும் வரையிலும் விடாது பல்வோறு நூல்களைக் கற்று புலமை பெற்றவர். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அரசியல், ஆன்மீகம், மதம் பற்றிய ஆய்வு, நாடகம், இலக்கியம், சினிமாத்துறை என் பல துறையிலும் தனது முத்திரையைய் பதித்தவர்.

“இது போன்று எத்தனையோ உதாரணங்களை கூறலாம். வாருங்கள் நண்பர்களே தினமும் படிப்போம். புதிய சகாப்தம் படைப்போம்”.


-

Tuesday, October 20, 2009

காதல்- ஒரு சிறு கதை

அவன் சென்னை தி.நகர் மாம்பலம் நிலையத்தில் தாம்பரம் ரயிலுக்காக காத்திருக்கிறான் .. இந்த இடத்தில அவனை பற்றி சொல்லி ஆகவேண்டும் .அப்படி சொல்லலேன எப்படி தெரியும் அவனை பற்றி.அவன் இப்போதைக்கு வேலைஇல்லாத இன்ஜினியரிங் பட்டதாரி .இன்ஜினியரிங் எண்பது பெர்சென் பெற்றிரூ ந்தும் அவனுக்கு கேம்பஸ் இன்டெர்வியுல செலக்ட் ஆவலே.

. ....கல்லுரி முடித்து ஆறுமாசம் ஆகிவிட்டது .....அவனுடைய வேலை தேடுதலும் தொடர்கிறது ....
இன்று கூட அவன் இன்டெர்வியுக்காக தான் ரயிலுக்காக காத்து இருக்கான் .வர்ற ரயிலு எல்லாமே கூட்டமா இருக்கே என்று சலித்து கொண்டான் .இந்த இன்டெர்வியுல ஆவது வேலை கிடைக்கணும்.இந்த வருட தீபாவளி யாவது முதல் சம்பளத்தில் கொண்டாடனும் என்று நினைத்தவன் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒரு நிமிட சிந்தனையில் மூழ்கியவன் யாரோ தன்னை அழைப்பது போல் உணர்ந்து திடுக்கன சிந்தனை தெளிந்தான் .அரக்க பரக்க சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரோ தன் பெயர் சொல்லி அழைத்தார்கள்..யாராக இருக்கும் என்று யோசித்தபடியே தன் இருக்கை யில் இருந்து எழும்பினான் ..
அவனருகில் ஒரு முக்காடு போட்ட பெண் உக்காந்து இருக்க கண்டான்.அவள் கூப்பிட்டு இருப்பாழோ ...என்று ஒருகணம் யோசித்தவன் ..அப்படியென்றால் என் பெயர் எப்படி தெரியும் .அந்த குரல் கூட அவனுக்கு பரிச்சியமானதாக இருந்ததே ..ரெம்பவே குழம்பினான் ..அந்த பெண்ணை நெருங்கி உற்று நோக்கினான்.அவள் வெடுக்கென திரும்பினாள்.இவள் எனக்கு நன்றாக தெரிந்தவள் ,இவள் என்னோடு நெருங்கி பழகியவள் என்று அவன் மனதில் ஒரு நிமிடம் பட்டது.

ஆமாம் ...அவள் தான் என்னுடைய யாமினி ....அவன் இதயம் படபடத்தது .அதே நேரம் அவளோ அவன் முகத்தை பார்க்கவே தயங்கினாள்..

யாமினி ...அவன் வார்த்தைகள் வெளிவர முடியாமல் தவிக்கிறது ...அவள் கண்களில் கணீர் வெளிவர அவளாலும் பேச முடியவில்லை .ஒருநிமிடம் இருவருக்குள்ளும் எந்த வார்த்தையும் பேச முடியவில்லை .. அவள் கண்களில் கண்ணீர் நிறைய வார்த்தைகள் வெளிவராமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து
கொண்டனர்.

யாமினி இப்போது ரெம்ப இளைத்து போயிருந்தாள்.அவளும் அவனும் நாமக்கல் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் .அவளுடைய காந்த பார்வையில் தான் அவன் தன்னை இழந்தான் ..ஆனால் இப்போது அந்த பார்வையில் காந்தம் இல்லை .வெறும் சோகமே அப்பி நிற்கிறது .ஆம் இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலர்கள்.காதல் என்றால் சதாரண காதல் இல்லை ..இருவரும் பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் .ஆகையால் அவர்களுடைய காதலுக்கு பள்ளியில் யாரும் எதிர்ப்பில்லை .ஒருகணம் நிதானத்துக்கு வந்த அவன்
'யாமினி உனக்கு என்ன ஆகிவிட்டது " அவன் மெதுவாக கேட்டான்.

அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.அவளை சிறு குழந்தையை கட்டி அணைப்பதுபோல் அணைத்து அவன் தோள்களில் சாய வைத்து அவள் முதுகில் வருடியபடி ஆறுதல் சொல்ல நினைக்கிறான் .ஆனால் ஏதோ ஓன்று தடுக்க அவள் முகத்தையே பார்த்தபடி தயக்கமுடன் நிற்கிறான் .

"யாமினி ஏதாவது பேசேன்" அவன் மீண்டும் அவளிடம் கேட்டான் .அவள் அழுதபடி இருந்தாள்..

அவனும் அவளும் பிளஸ் டூ முடித்தபிறகு மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து முதலாண்டு படித்து கொண்டு இருக்கும் போது இவர்கள் காதல் அவளுடைய அப்பாவுக்கு தெரிய வர இவள் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்கள்.காதல் வானில் பாடி திரிந்த அந்த பறவையின் சிறகுகள் ஒடிக்கப்பட்டு வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டது .அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பிறகு பாக்கவோ சந்திக்கவோ முடியவில்லை .இருவரும் வெவ்வேறு சாதியாக இருந்ததால் அவள் அப்பனுக்கு சமுக கௌரவ பிரச்சினையாகிவிட்டது.

அவள் பிரிவு அவனை ரெம்பவே பாதித்தது .முதலாண்டு கல்லுரி படிப்பை உதறி விட்டான்.அவனின் நிலையை கண்ட அவன் பெற்றோர் மிகவும் கலங்கினர் .அவன் அப்பா அவனுக்கு பல அறிவுரைகள் வழங்கினார்.நாட்கள் செல்ல செல்ல அவன் சதாரண நிலைக்கு திரும்பினான்.கொஞ்சம் நட்களுக்கு அப்புறம் அவளுக்கு அவள் மாமா பையனுடன் கல்யாணம் ஆகிவிட்டது என்று அவள் தோழி மூலமாக தெரிந்தான் .அதன்பிறகு இப்பதான் அவளை இந்த கோலத்தில் பார்கிறான் .

"கடவுளே என்ன சோதனை இது .வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக நீ இருக்க வேண்டும் என்று உனக்காக ப்ரேயர் பண்றேனே யாமினி ...ஏன் உனக்கு இப்படிஆகி விட்டது .உன்னுடன் யாரும் வரவில்லையா ? "என்று அவன் கேட்க ,

"அப்பா வந்து இருக்கார் .அவர் கடைக்கு போயிருக்கார் "என்று அவள் சொல்லிவிட்டு அப்பா வருகிறாரா என தன் பார்வையை சுழலவிட்டு அவனை தவிர்க்க முயற்சித்தாள் .

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .என்ன நடக்கிறது ?அவள் அப்பா வந்துவிட்டார் .அவரால் அவன் முகத்தில் முழிக்க முடியவில்லை .அவர் எங்கையே பார்த்தபடி தன் மகளிடம் பேசினார் .

"அங்கிள் எப்படி இருக்கீங்க?அவனே வினவினான் .அவரால் அதற்கு பதில் சொல்ல இயலவில்லை .
"யாமினிக்கு என்னாச்சு அங்கிள் ?ஏன் அவள் இப்படி இளைத்து போய் சோகமாக இருகிறாள் ?"

அவர் கண்களில் கண்ணீர் நிரம்ப ."என்னை மன்னித்து விடுங்கள் தம்பி."என்றவர் அவன் கைகளை பற்றி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

"என்னுடைய கௌரவத்துக்காக என் பொண்ணு வாழ்கையை நானே தொலைசுட்டேன் தம்பி .உங்க காதலை பிரிபதற்காக அவசரப்பட்டு அவள் மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் .அவனை ரெம்ப நல்லவன் என்று தான் நினச்சு இருந்தேன் .ஆனா அந்த பாவி பய கண்ட கண்ட பொண்ணுங்ககிட்ட தொடர்பு வச்சிட்டதால எய்ட்சு வந்து போன மாசம் செத்து போயிட்டான் ..இப்ப இவளுக்கு டெஸ்ட் பண்ணினப்போ எச்ஐவி பாசிட்டிவ்வுன்னு ரிசல்ட் வந்துருக்கு " என்று சொன்னவர் அப்படியே தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார் .

அவனுக்கு ஒருகணம் தலையே சுத்தியது .பேயறைந்துதது மாதிரி உணர்ந்தான்.வார்த்தைகள் வரவில்லை .கேவி அழும் யாமினியை பார்கிறான் .அவள் கண்களில் கண்ணீர் வற்றி போயிருந்தது .அவள் அழுது அழுது கண்கள் கண்ணீர் வற்றி பாலைவனம் ஆகி இருக்கலாம் .

எப்படி வாழகூடாது .எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை ஆகக்கூடாது என்று அவன் நினைப்பாநொ அந்த வாழ்க்கை அவன் நேசிப்பவளுக்கு ஆகி விட்டதே ..அவனால் ஜீரணிக்க முடியவில்லை .,

"யாமினி ஏதாவது பேசு .எச்ஐவி ஓன்னும் மனிதனை கொல்லாது.நீ கவலை படாதே ..நான் உன்னை பார்த்து கொள்கிறேன் .உனக்கு தேவை இப்போது அன்பு கட்டும் ஒரு இதயம் .அது எப்போதும் உனக்காக என்னிடம் இருக்கிறது .நீ என்னுடன் வா " என்று அழைக்க அவளோ சலனமில்லாமல் உக்காந்து இருகிறாள் .

"தம்பி நீங்க தெய்வம் மாதிரி .நான் தான் என் பொண்ணு வாழ்க்கையை தொலைச்சிட்டேன் .நான் உங்க மனச புரியாம உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் .ஆனா நீங்க அதை மனசுல வைக்காம என் பொண்ணை கூட வைச்சு பார்க்கிறேன் என்று சொல்லுறிங்களே .உங்க காதல் எவ்வளவு உண்மையானது என்று புரிஞ்சிட்டேன் " என்றபடி அவன் காலில் விழுந்தார் .

அவரை தொட்டு தூக்கிய அவன் "அங்கிள் நீங்க என் காலில் விழுந்துட்டு...என்று வார்த்தையை முழுங்கிட்டு "ஒன்றும் கவலை படாதீங்க" என்று ஆறுதல் கூறினான் .

இனிமேல் அவளுக்காக வாழ வேண்டும் .அவளுக்காக சரியான சிகிச்சை பெற்று தரணும் என்று திடமான முடிவோடு அவளை நோக்க ...அவளோ வெற்று பார்வையுடன் எங்கோ வெறித்தபடி உக்காந்து இருந்தாள் .

தன்னலம் கருதாது காதலியின் நலம் கருதும் உண்மையான "காதல்" இது

Monday, October 19, 2009

நண்பனுக்கு ஒரு கடிதம் 1

அன்புள்ள நண்பனுக்கு ,
நான் நலம் .அதுபோல் அங்கு நீயும் உன் குடும்பத்தினரும் நலம் என நம்புகிறேன் .நான் ரெம்ப நாட்களாகவே உனக்கு கடிதம் எழுதணும் என்று நினைத்து இருந்தேன் .ஆனால் அலுவலக வேலை காரணமாக கடிதம் எழுத நேரம் கிடைக்கவில்லை ..நான் என்னுடைய ஓய்வு நேரங்களில் நமது நட்பை பத்தியும் நாம் நமது சிறு வயது வாழ்க்கை பற்றியும் நினைத்து சிலிர்ப்பது உண்டு .

நாம் பள்ளிக்கூடம் செல்லும்போது தங்கையன் மாந்தோப்பில் ஒருநாள் நீயும் நானும் மாங்காவை திருட போய் அவன் மவன் நம்மை புடித்து மாமரத்தில் கட்டி வைத்து என்னோட அப்பாவை வரவைத்து அப்பாவிடமிருந்து பிரம்பு அடி வாங்கிய நா நீ நினைத்து பார்பதுண்டா ? இந்த சம்பவத்தை நினைக்கும் போது அப்பா அடித்த இடத்தை கையால் தடவி பார்ப்பேன்.இந்த சம்பவம் தான் என் மனதில் அடுத்தவர் பொருளின் மீது ஆசை வைக்க கூடாது என்ற ஒரு பாடத்தை போதித்தது. அப்பாவும் அம்மாவும் தான் உலகின் முதல் ஆசிரியர் என்பது மறுக்க முடியாத உண்மை .
அன்பு நண்பா ! கவலை இல்லாத எதை பத்தியும் வருத்தபடாதா அந்த சிறு வயது வாழ்கைக்கு திரும்ப செல்லவே எனது மனம் விரும்புகிறது .கள்ளம் கபடம் இல்லாத வாழ்க்கை பற்றிய கவலை இல்லாத அனைவராலும் அன்பு காட்டபடுற அந்த வாழ்க்கை பத்தி நீ நினைப்பது உண்டா ?ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பாவின் அலுவலக இடமாறுதல் காரணமாக நான் உன்னை பிரிய நேர்ந்தபோது நான் என் வீட்டில் இரண்டு நாள் சாப்பிடாமல் அடம் பிடித்து மீண்டும் உன் வீடிற்கு வந்ததை இப்போதும் என் அம்மா அடிகடி சொல்வார்.அப்போது விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது உன்னை காண வருவேன் .அப்போது தினவும் விடுமுறை வரணும் உனக்கு பத்து பைசா காணிக்கை போடுறேன் என்று நம்மமூரு கருப்ப சாமிகிட்டே வேண்டி கிட்டது இப்பவும் எனக்கு ஞாபகம் வரும் .
அடுத்த இரண்டு வருடங்களில் அப்பாவுக்கு அதே ஊரில் மாறுதல் கிடைக்க திரும்பவும் உன்னுடன் எட்டாம் வகுப்பில் வந்து சேர்ந்து விடேன்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது நாட்டு நலபணி திட்டத்தின் (N.S.S) மூலம் நாம் ஒரு ஊருக்கு ரோடு போட்டு கொடுத்தோம் .
அந்த ஊர்மக்கள் ரெம்பவும் மகிழ்ந்து நம் டீமை ரெம்ப புகழ்ந்து பாராட்டினார்கள் .அப்போது நான் மிகவும் மகிழ்ந்தேன்.

இதே மாதிரியான N.S.S மற்றும் N.C.C பயிற்சிகள் மற்றும் கேம்புகள் கண்டிப்பாக பள்ளிக்கூடங்களில் தேவை .ஆனால் அதை பற்றி முழுமையான பயிற்சிகள் எல்லா பள்ளிக்கூடங்களிலும் சொல்லித்தருவதில்லை.வெறும் புத்தக படிப்பு மட்டும் ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக மாற்றாது.புத்தக படிப்போடூ வாழ்க்கை கல்வியையும் போதித்தால் தான் அந்த மாணவனால் சமுகத்தில் எதையும் தாங்கும் இதயம் கொண்டவனாக சமுக பிரச்சினைகளை எதிர் கொள்பவனாக வருவான்.நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒழுக்கம் போதிப்பவனாக இருப்பான்.

அன்பு நண்பா! நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது நாமனைவரும் இணைந்து ஆரம்பித்த Blood donar association உன் வீட்டிலும் என் வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது ஞாபகம் இருக்குதா ?என் அப்பா டாய நீ ஸ்கூலுக்கும் போகவேண்டாம் ...படிச்சு கிழிச்சதெல்லாம் போதும் என்று எதிர்ப்பு காண்பிச்சாரே ..உன் அப்பாவும் அதே மாதிரி தானே குதிச்சார்.அப்போது நமக்கு இருந்த ஒரே ஆதரவு பார்வதி டீச்சர் தான்.இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் .நீ அவங்களை பார்த்தால் நான் ரெம்ப கேட்டதாக சொல்.அவர்கள் தான் நமக்கு முழு ஆதரவு தந்ததோடு தலைமை ஆசிரியரிடமும் நம்மளை பற்றி சொல்லி ஸ்கூல் அசெம்ப்ளியிலும் சொன்னார்கள் .நாம் அவங்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம் .பிள்ளைகள் சமுக பிரச்சினைகள் பற்றி பேசும்போதோ அல்லது சமுக இயக்கங்கள் உருவாக்கும் போதோ எத்தனை பெற்றோர்கள் ஆதரிக்கிறார்கள் .இல்லை யாருமே ஆதரிப்பது இல்லை .அரசியல் என்பது கெட்ட வார்த்தையாக போதிக்கபடுகிறது.கொள்ளை அல்லது கொலைகாரன் தான் அரசியல்வாதி யாகனும் என்ற நிர்பந்தம் சமுகத்துக்கு ஏற்பட்டுவிட்டது .இது ஒரு அடிப்படை சமுக கோளாறு .

அன்பு நண்பா!மக்கள் சேவையே மகேசன் சேவை என்று முழங்கும் அரசியல் வாதி மேல் எனக்கு கோபம் வருகிறது .ஆனாலும் அவர்கள் சரியாக தான் சொல்லுகிறார்கள் .நாம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம் .அவர்கள் மக்கள் என்று சொல்லுவது நாட்டு மக்களை அல்ல அவர்கள் சொந்த மக்களை .அவர்கள் தன் மக்களுக்கு சொன்னபடி சேவை செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் மேலாகியும் இன்றும் நாம் சமமான பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை .நகரங்கள் வளர்கின்றன .கிராமங்கள் தேய்கின்றன என்ற நிலையில் தான் இருக்கிறோம் .நம் இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் உயிர்நாடியான கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்னார் மகாத்மா காந்தி .ஒட்டுமொத்த GDP வளர்ச்சியில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாம் தனி நபர் வருமானத்தில் நூற்றி நாற்பத்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறோம் .

இவை மாறவேண்டுமானால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் .நகரங்களில் இருக்கும் வளர்ச்சி கிராமங்களில் பரப்பப்படவேண்டும் .இந்த பரப்புதல் இப்போதைய தகவல் தொழில் நுட்ப புரட்சியில் சாத்தியமே ...

அன்பு நண்பா ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் உனக்கு கடிதம் எழுதிகிறேன் .இனி வரும் கடிதங்களில் நம்முடைய இளவயது நினைவுகளுடன் செய்திகளையும் விமர்சனம் செய்ய போகிறேன் .உனது கருத்துகளையும் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன் உனது நண்பன்
கருத்து சுதந்திரம்

Sunday, October 18, 2009

கக்கன்ஜீ க்கு ஒரு வணக்கம்

கக்கன் அவர்களுக்கு நூறாண்டு விழா இந்த வருடம் தமிழக அரசால் கொண்டாடபடுகிறது என்பது இந்த வார செய்தி .கக்கனுக்காக அவர் பிறந்த தும்பைபட்டி (மதுரை) நூறாண்டு மண்டபத்தையையும் கட்டியுள்ளது தமிழக அரசு.கக்கன் பற்றிய இந்த செய்தியை படிக்கும் போது அவரின் எளிமையான வாழ்க்கை பொது வாழ்வில் கடைபிடித்த நேர்மை,மக்களுக்காக வாழ்ந்து மறைந்த அவர் தியாகம் ஆகியவை மனதில் வந்து செல்கிறது .
கக்கன் பொது பணித்துறை அமைச்சராக காமராஜ் அமைச்சரைவையில் இடம்பெற்று இருந்த போது தான் வைகை மற்றும் மேட்டூர் அணைகள் கட்டபட்டன .கக்கனுடைய நூறாண்டு விழா நடந்து வரும் இந்த நேரத்தில் அவருடைய வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு தடைவை கக்கன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சென்றிருந்தார் .மருத்துவமனையிலோ கடுமையான கூட்டம். நேரடியாக அனுமதி சீட்டு கௌண்டருக்கு சென்ற அவர் தன்னுடைய பெயரை சொல்லி அனுமதி சீட்டு கேட்டார்.அவரை அடையாளம் கண்டு கொண்ட மருத்துவமனை ஊழியர் எழுந்து அவரிடம் நேரடியாகமருத்துவரை பார்க்குமாறு பணித்தார் .ஆனால் கக்கனோ மறுத்துவிடார்.மக்களோடு மக்களாக இருந்து தனது முறை வரும்போது மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்று கொண்டார் .
இப்படிப்பட்ட ஒரு மக்கள் தலைவருக்காக நூறாண்டு விழா கொண்டாடும் தமிழக அரசை பாராட்டலாம் .தனக்காகவோ தன் குடும்பதுக்காகவோ வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த இந்த தலைவர்கள் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்வோம்.ஆனால் இன்றைய தலைவர்கள் அனைவரும் அரசாங்க சொத்தை கொள்ளை அடித்து பரம்பரைக்கு சொத்து சேர்க்கிறார்கள் .

என்ன இவன் கருத்து சொல்லுறேன் என்று சொல்லிட்டு கக்கன் வரலாறு தெரியணும் என்று சொல்லுராமுனுங்குவது தெரியுது சார்...அடுத்த வலைபதிவில் ஏதாவது யோசிச்சு எழுதுறேன் சார்......

Tuesday, October 6, 2009

இன்றைய கருத்து -கோடிகளின் அரசியல்

ராகுல் காந்தி உத்திர பிரதேஷ் மாநிலத்தில் தலித் கிராமத்தில் தங்கி தலித்களுடன் சாப்பிட்டார் என்பது இந்த வார செய்தி ...அதோடு மாநில காங்கிரஸ் தலைவி ரீடா பகுகுணா விடுத்த அறிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் தலித் வீடுகளில் காந்தி ஜெயந்தி அன்று தங்கி அவர்களின் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் .மேலும் மத்திய அரசாங்கத்தின் National Rural Employment Guarantee programme பத்தி தலித் மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார் .

ஆனால் நடந்தது என்ன ?மொரடபாத் M.P முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷாரூதின் தன்னுடன் குக்கை அழைத்து கொண்டு பிரியாணி சமைத்து சாப்பிட்டு இருக்கார்.ராகுல் காந்தி தலித் வீட்டு சாப்பாட்டை தான் சாப்பிட்டார்...ஆனால் இவரோ ராகுலின் நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்.ராகுல் பிக்னிக் போகவா கேட்டு கொண்டார்...விட்டால் இவனுங்க பொண்டாட்டியையோ அல்லது வைப்பாட்டியையோ கூப்பிட்டு வயல்வெளியில் தேனிலவு நடத்துவானுங்க.

கோடிகளில் புரண்டவனுங்களுக்கு தெருகோடியின் கஷ்டம் எப்படி புரியும். கிரிக்கெட்டில் சம்பாதித்தது போதாது என்று மேட்ச் பிக்ஸ்சிங் செய்தவர்தானுங்கே இவர்.காந்தி ஜெயந்தி அன்று காந்தியையே கேவலபடுத்துரானுங்க.அரீஜனுக்காக
தன் சட்டையையே துறந்தவர் காந்தி.இந்திய தேசிய காங்கிரசில் சேருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் குக்கிரா மங்களில் கூட கால்நடையாய் நடந்து மக்கள் நிலையை அறிந்து அதன்பின் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் காந்தி.ஆனால் இவன்னுங்க பண்றது என்ன ? சினிமாவிலே அல்லது கிரிக்கெட்டிலோ கிடைக்கும் பப்ளிசிட்டில ரிட்டையர்டூ ஆனதுக்கு அப்புறம் சம்பாதிச்ச பணத்தை காப்பாத்தவும் மக்கள் வரிபணத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும் தான் அரசியலுக்கு வர்ரானுங்க...

அடிமட்டத்தில் மக்களோடு மக்கள் கலந்து டெலிபோன் பில்லில் இருந்து பால் வங்ககிறது வரைக்கும் கியூவில் நிக்கிற காமன் மேன்(கமல் பாணியில் சொல்லுவதாக இருந்தால்) தான் அரசியலுக்கு வரணும் .தினம் தினம் பத்திரிக்கை படித்து ,நூல்களை படித்து அரசியல் ஞானம் பெற்று தெளிவான சிந்தனையோடு வருகின்ற அரசியல்வாதி தான் மக்களுக்கு நல்லது செய்வான் .

ஆனால் இன்று M.P சீட்டூம் M.L.A சீட்டூம் கோடிகளில் தான் முடிவு செய்யபடூகிறது.அரசியல் என்பது இப்போது மன்னர் பரம்பரை என்று ஆகிவிட்டது.தன் மகன் டாக்டர் ஆகணும் என்சினியர் ஆகணும் என்று விரும்புற காமன் மேன் தன் மகன் அரசியல் விஞ்ஞானம் படிச்சு அரசியல்வாதி ஆகணும் என்று விரும்புறது இல்லை.இப்போ கிரிமினல் சட்டம் படிசிட்டு அரசியலுக்கு வர்ற வழக்கறிஞர்கள் தான் ரெம்ப அதிகமாயிட்டாங்க....இது ஒரு சமுக அவலம் ....

இது நமது அடிப்படை கோழாரா அல்லது கல்வி முறை கோழாரா என்பது பற்றிய விவாதம் உடனே அவசியம்

கருத்து சுதந்திரம் வலைபூ முலமாக உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்சி அடைகிறேன் ....
எனது கருத்துகளை சுதந்திரமாக சொல்லு வதற்காகவே கருத்து சுதந்திரம் என்று பெயர் வைத்திருகிறேன் .
சுதந்திரமாக கருத்துகளை சொல்வோம்

கருத்துகள் சமூக அவலங்களை தோலுரித்து காட்ட வேண்டும் ....கருத்துகள் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்...
கருத்துகள் அனைவராலும் பரப்பப்பட வேண்டும் .....வாருங்கள் கருத்துலகில் பயணிப்போம் ...