Sunday, November 8, 2009

நண்பனுக்கு கடிதம்3: தேசிய ஒருமைப்பாடு

அன்புள்ள நண்பனுக்கு ,
நலம் ,உன் நலமறிய ஆவல். தமிழகம் முழுதும் நல்ல மழை என்று ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.இப்போது தண்ணீர் வடிந்து விட்டதா ?
மழை என்றவுடன் நாம் இருவரும் சிறுவயதில் காகித படகு செய்து தண்ணீரில் விட்டு விளையாடியதும் ,ஆற்று தண்ணீரில் மீன் பிடித்ததும் எனது நினைவுக்கு வருகிறது .அந்த பசுமையான நினைவுகள் என்றும் நமது நினைவை விட்டு அகலாதவை...

அன்பு நண்பா!உலகம் முழுதும் பரவி இருக்கும் ஒரே இனம் தமிழினம்தான் என்பது உனக்கு தெரியும் .சதாரண கம்பெனியில் இருந்து உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழன் இல்லாத இடங்களே இல்லை எனலாம் .உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழனின் முக்கிய பலமே அவனுடைய தளராத உழைப்பும் ஆங்கில அறிவும் தான் என்பதில் தான் எந்த சந்தேகமும் இல்லை .உலகம் முழுதும் பரவி இருக்கும் தமிழன் தனது சொந்த நாட்டில் தனது முகவரியை இழந்து அந்நியனாக இருக்கிறான் என்பது எனது கருத்து .

ஏன் ?எப்படி என்று நீ கேட்பது எனக்கு புரிகிறது .பக்கத்து மாநிலங்கள் தண்ணீர் தர மறுகின்றன.ஆனால் நாம் வாய் கிழிய தேசிய ஒருமைப்பாடு என்று பேசுகிறோம்.தேசிய ஒருமைப்பாடு என்பது ஏதோ இந்தியா கிரிக்கெட் விளையாடும் போது அனைவரும் சேர்ந்து நிற்பதோ எல்லையில் யுத்தம் வரும்போது நாம் சேர்ந்து குரல் கொடுப்பது மட்டும் அல்ல.வீட்டில் நாம் சாப்பாடு பொங்கி வைத்துவிட்டு பங்கிட்டு சாபிடுவதுபோல் நமது இயற்கை வளங்களையும் பங்கிட்டு கொள்வது தானே ஒருமைப்பாடு .நமது தேசிய ஒருமைப்பாடு இன்னும் பலமாக அமையவேண்டமா ?

மும்பையில் குண்டு வெடிக்கும் போதும் நமது இதயம் வருந்த வேண்டும்.ஆனால் நமது ஊடகங்கள் மும்பையில் குண்டு வெடிப்பதை ஏதொ ஆப்கானிஸ்தானில் வெடித்தது என்பது போல் சொல்கிறார்கள்.எனவே ஒருமைபாடு உருவாக்குவதில் ஊடகத்தின் பங்கு மிக முக்கியம் என்பதை நீ அறிவாய்.

நண்பா ! நாம் இன்னும் ஒரு விசயத்தில் இந்தியாவை விட்டு விலகி நிற்பது உனக்கு தெரியுமா ?அதுதான் மொழி .தமிழ் மொழி தொன்மையானது.அது நமது மொழி என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.தமிழ் வளரவேண்டும்.அது இன்னும் எனக்கும் பரவ வேண்டும்.ஆனால் அரசியல் அதிகாரத்தை பிடிக்க திராவிட முன்னேற்ற கழகம் ஒரு வரலாற்று பிழையை செய்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.அதுதான் ஹிந்தி எதிர்ப்பு .திராவிட முன்னேற்ற கழகம் எடுத்த அந்த முடிவால் நாம் ஹிந்தி கற்க முடியாமல் போய்விட்டது.

நண்பா !தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஹிந்தி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது தான் நாம் நொந்து போய் நூடுல்ஸ் ஆகிறோம் .நமது நாடு இந்தியா !நாம் இந்தியன் என்று உரக்க கூறும் நாம் நமது இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பேசும் நமது தேசிய மொழியான ஹிந்தியை கற்காமல் போனது பெரிய துர்திர்ஷ்டம் .அவர்கள் பண்ணிய வரலாற்று பிழையால் நாம் அவமானப்படுவது வட நாட்டவரிடம் தான்.வந்து அனுபவித்து பார்.வலி தெரியும் .

நண்பா ! தமிழ் !தமிழ் என்று கத்திய இவர்களால் தமிழை எவ்வளவு வளர்த்த முடிந்தது ...ஒன்றுமே இல்லை ..முறையாக செம்மொழி ஆக்கினார்களா ?அதுவும் இல்லை ..குழந்தைகள் அம்மா அப்பா என்று கூப்பிடுவதை மறந்து போய் ஒரு தலைமுறை முடிய போகிறது .ஆம் .இன்று ஆங்கில கல்வி தமிழை ஓரம் கட்டிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை .ஆங்கில மொழி கல்வியில் படிக்கும் மாணவனால் பத்து வார்த்தை தமிழில் எழுத முடியவில்லை என்பது உனக்கு தெரியுமா ?ஆங்கிலத்துடன் ஹிந்தியையும் சேர்த்து படிப்பதால் தமிழனுக்கு என்ன குறைந்து விட போகிறது?தமிழனின் கொடி இன்னும் மேலே பறக்காதா?

அன்பு நண்பா !ஆட்சி யாளர்கள் சொல்வது சொல்லட்டும் ...பள்ளியில் ஹிந்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை..நாம் நமது குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழுடன் நமது தேசிய மொழியையும் புகட்டுவோம் ....தேசிய ஒருமை பாட்டை பலமக்குவோம் ...இத்துடன் முடிக்கிறேன் ...உனது பார்வையை கருத்துரையாக எழுது ...

அன்புடன்
கருத்து சுதந்திரம்

No comments:

Post a Comment