Sunday, February 13, 2011

தனிமனித ஒழுக்கம்




மக்கள் தொகையில் உலகின்இரண்டாவது இடத்தில் இருக்கும்மிகப்பெரிய ஜன நாயக நாடானஇந்தியாவில் இன்று பெரும் சாபக்கேடாக இருப்பது ஊழல் .முந்த்ரா ஊழலில் இருந்து இன்றைய இரண்டாம்தலைமுறை அலைகற்றை ஒதுக்கீட்டுஊழல் வரை நடந்த ஊழல்களில்இதுவரை ஊழல்வாதிகள் தண்டனைபெற்றதாக சரித்திரம் இல்லை.அரசியல் என்றாலே சம்பாதிப்பதற்கான தளம் என்ற தவறான எண்ணம் இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்பட்டு இருக்கிறது.தொன்மையான பாரத கலாச்சாரத்தின் அரசியல் களத்தின் 1947 சுதந்திரத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் அமைப்பில் ஏற்பட்ட கோளாரே இதற்க்கு காரணம் என்றால் மிகை அல்ல . இந்த மனநிலை மாற்றம் சமூகத்தில் எப்போது ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் .1967 தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் முதல் அமைச்சரான கலைஞர் .கருணாநிதி மீது சுமத்தப்பட்ட ஊழல் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது .அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கபட்ட நீதிபதி சர்க்காரியதலைமையிலான கமிட்டி கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல்செய்துள்ளார் என்று அறிக்கையை சமர்பித்தது.ஆனால் நடவடிக்கை இல்லை.

அரசியலில் வாரிசுகளின் அடாவடித்தனம் ரவுடிகளின்அடங்காபிடாரிதனம்,கிரிமினல்களி
ன் பங்களிப்பு ஆகியவை மீண்டும் நமது அரசியல் அமைப்பை சகதியில்தள்ளி விடுமோ என்ற அச்சம் சமூகவியலார் மத்தியில் எழுந்துள்ளது.நமதுசமூக அமைப்பு உலகிலே தொன்மையானது .நாம் நமது பாரதகலாச்சாரத்தினால் நிமிரிந்து நிற்கிறோம் .ஆனால் இன்று நமது சமுகத்தைதொன்மையை பாதுகாத்து பேணி காப்பாற்ற வேண்டிய அரசியல் அமைப்புசெல்லரித்து விடுமோ என்ற ஐயம் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகள்நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கின்றன.

ஒரு நாடு நல்ல நாடாக திகழ நல்ல மக்களை பெற்று இருக்க வேண்டும்அந்த நல்ல மக்கள் ஒழுக்க சீலர்களாய் திகழ வேண்டும்.அந்த நல்ல மக்கள்தனிமனித ஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும்.அந்தஒழுக்கத்தை நாம் எங்கிருந்து பெறுவது ?என்ற கேள்வி உங்கள் மனதில்எழுவது தெரிகிறது.எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் இந்த பூமியில்பிறக்கையிலே என்ற கருத்துக்கு யாரும் மறுப்பளிக்க முடியாது.அந்தகுழந்தை நல்ல குழந்தையாக வளர்வதில் தாய்க்கு இருக்கும் பங்கு போல்சமுதாயத்திற்கும் பங்கு உள்ளது .பொய் சொல்ல கூடாது பாப்பா என்றுபாரதியார் பாடலை படித்து வளரும் சிறுவனோ அல்லது சிறுமியோ தான்படிக்கும் வாழ்க்கை பாடத்திற்கு நேர் மாறான சமுதாயத்தை தான் பார்க்கமுடிகிறது.

எனவே தனி மனித ஒழுக்கம் மூலமாக தான் நாம் நல்ல நேர்மையானசமுகத்தை அமைக்க முடியும் .அதற்க்கான முயற்சிகள் பள்ளி பருவத்தில்இருந்து ஆரம்பிக்க படவேண்டும் .ஆனால் அதை போதிக்கும் ஆசிரியர்கள்நேர்மையானவர்களாக இருக்கவேண்டும் .அவர்கள் தனிமனிதஒழுக்கத்தில் தலை சிறந்து விளங்க வேண்டும் .ஆசிரியர்கள் கற்பிக்கும்ஒழுக்கம் ஒழுக்கமற்றவர்களாக இருக்கும் பெற்றோரை மாற்றும் விதமாகஇருக்க வேண்டும் .உதாரணமாக தனது தந்தையுடன் கடைக்கு செல்லும்சிறுமி தனது தந்தை வாழை பழம் சாப்பிட்டு விட்டு தோலை பொது இடத்தில்வீசி எறிய முற்படுகையில் அதை தடுத்து 'அப்பா தோலை குப்பைதொட்டியில் தான் போட வேண்டும் 'என்று அறிவுரை கூறுபவர்களாக மாற்றவேண்டும் .அப்படி ஒரு சிறுமி சொல்வாளானால் அந்த தந்தை நாணி குறுகிவிடுவார்.அப்படிப்பட்ட சிறுவர் சிறுமியரை உருவாக்கும் மிகப்பெரியபொறுப்பு ஆசிரியர் சமுதாயதிற்கு இருக்கிறது .

தனிமனித ஒழுக்கம் நமது பாரத தேசத்தின் மதிப்பை உயர்த்தும் .தேசபற்றுவளரும் .புராதன இந்தியாவின் கலாச்சாரம் தேடி வருவோர் எண்ணிக்கைகூடும் .தேசத்தில் நேர்மையான அரசியல் ,ஊழலற்ற அரசாங்கம்வன்முறை,சாதிகளற்ற,குற்றங்கள் அற்ற சமூகம் அமையும் .நினைத்துபார்க்கும் போதே நெஞ்சம் குளிர்கிறது .....

ஆனால் அதை நிறைவேற்ற போவது யார் ?ஆசியர் சமுதாயமா ?பெற்றோர்சமுதாயமா?அல்லது அரசாங்கமா? என்பதே நமக்குள் எழுகின்ற மில்லியன்டாலர் கேள்வி ....
. ,