நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.
Wednesday, November 25, 2009
சிந்தனை செய்வோம் ..பிரகாசமாய் வாழ்வோம்
மனம் என்பது நமது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் .நமது மனதில் நல்ல சிந்தனைகளை வளர்க்க வேண்டும் .நல்ல சிந்தனைகள் வளர்ந்தால் நமது முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றும்.உங்களுடைய நன்னடதைகள் மற்றவர்க்கும் பரவும் .எனவே நல்ல சிந்தனைகள் மிகவும் முக்கியம் .
எதையும், யாரையும் சமாளிக்க முடியும். முப்பத்திரண்டு பற்களுக்கிடையில் ஒரு மெல்லிய நாக்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?· உங்கள் உதடுகளில் எப்போதும் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருக்கட்டும். எதிர் வருவோர் எல்லோரையும் அது பற்றிக் கொள்ளும்.· சோதனைகளை எதிர்கொள்வதில் தான் மனிதனின் சக்தி வெளிப்படுகிறது.· பணம் போனாலும் பரவாயில்லை. சொல்லை சிதறவிடக் கூடாது.· எதையுமே உடனே செய்து முடித்துவிடுங்கள். ஒதுக்கி வைத்தால் சுமை கூடி இறுதியில் ஒன்றையுமே செய்ய முடியாமல் போய்விடும்.· சிந்திக்காமல் படித்துக் கொண்டே போவது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் போல.மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்!!!
நிறைய படிப்போம் ...அதிகமாய் சிந்திப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment