Thursday, December 3, 2009

யார் புத்திசாலியாக இருக்க வேண்டியது அவசியம்?



என்னுடைய நண்பரும் அவருடைய மனைவியும்பணிக்குச் செல்பவர்கள். இருவரும் இணைந்துமாதம் சுமார் மூன்று லட்சம் ஊதியமாகஈட்டுபவர்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள். வீட்டில் 3 கார்கள், you name it, they have it என்றநிலையில் சகல வசதிகளோடு வாழ்பவர்கள். காலை எட்டு மணிக்குக் கிளம்புவார்கள். மனைவிமாலை ஏழு மணிக்குத் திரும்பி வருவார். கணவர் 9 மணிக்கு. குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஒருஆயா. அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லஒரு ஓட்டுநர், சமையல்காரர் எனப் பலர்இருப்பார்கள் வீட்டில். குழந்தைகளுக்கு என்னவேண்டுமோ அதை செய்து கொடுங்கள் எனசமையல்காரரிடம் ஆணையிட்டு அலுவலகங்களுக்குச் சென்று விடுவார்கள் இத்தம்பதியினர். அக்குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், எதை விரும்புகிறார்கள்எனக் கூட அந்தப் பெற்றோருக்குத் தெரியாது.
இந்த நிலையில் தான் பல பெற்றோர்கள் இன்று இருக்கிறார்கள். வீட்டில் ரகளைசெய்யாமல் எதையாவது சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என பெரும்பாலானபெற்றோர்கள் இருக்கிறார்கள். இது பெரிய ஆபத்தில் போய் முடிந்துகொண்டிருக்கிறது.

ஆனல் இதைப்பற்றி உண்மையிலேயே யார் கவலைப்படுகிறார்கள் எனத்தெரியவில்லை.
ஒரு விஷயம் நீங்கள் பார்த்து இருக்கலாம். குழந்தைகளுக்கானமருத்துவமனைகளில் இன்று கூட்டம் அதிகரித்து வருகிறது. வெறும் காய்ச்சல்போன்றவை மட்டுமல்ல. பலவிதமான பெயர் தெரியாத நோய்கள் இன்றைக்குக்குழந்தைகளை தாக்கி வருகின்றன. இதற்கு உடனடியாகக் கிடைக்கும் காரணம்குழந்தைகளின் உணவுமுறைகள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள்.
பள்ளிக்கூடங்களின் அருகில் பலவிதமான பண்டங்கள். பலவிதமான மொய்க்கும் பலகாரங்கள். சீஸனுக்கு உதவாத பழங்கள், பாட்டில்களில் எந்தமாதமோ செய்த அழுக்குப் படிந்த ஜீராவில் மிதக்கும் ஜாமூன்கள், இதைப்போலகலர் கலராக ஏதேதோ மிட்டாய்கள். பள்ளி கேட்டின் உள்ளிருந்தவாறேகுழந்தைகள் கேட் சந்தின் வழியாகக் காசு கொடுத்து தின்பண்டங்களை வாங்கிகண்டவாறு சாப்பிடுவதை நீங்கள் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். இதை எப்படிப் பள்ளி நிர்வாகங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன எனதெரியவில்லை. இதை சாப்பிட்டால் என்ன என்ன வியாதிகள் வரும், அதுவும்குழந்தைகளை எவ்வளவு வேகமாக அவ்வியாதிகள் தொற்றிக் கொள்ளும் என்றுஅந்தப் பள்ளி நிர்வாகிகள் எல்லோருக்கும் தெரியும். ஆனல் நமக்கு ஏன் இந்தவேலையெல்லாம் என்ற ஒரு அலட்சியம். ஒரு ஆசிரியர் சமுதாயமோ பள்ளிநிர்வாகமோ குழந்தைகளின் நலத்திற்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறபட்சத்தில், இவர்கள் அனைவருமே பெரும் தண்டனைக் குள்ளாவர்கள்.

இவர்கள்
மனசாட்சி இல்லாதவர்கள். பல பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் சாக்கடைதண்ணீர் பல மாதங்களாக தேங்கி இருப்பதை பார்க்கலாம். இது தெரு பிரச்னை, பஞ்சாயத்து பிரச்னை என்று பாராமல் பள்ளி நிர்வாகம் தான் உடனடியாகசெயல்பட்டு அந்தப் பகுதியை நல்ல முறையில் வைத்துக் கொண்டு பள்ளி வரும்குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதுமிகவும் அவசியம்.
காலை வேளையில் சிற்றுண்டி உண்டு வராத குழந்தைகள், கணக்கில்லாமல்பணம் வைத்திருக்கும் குழந்தைகள் இதைப்போல கண்டதை தினமும் வாங்கிசாப்பிடுகின்றன. நாமும் இதைப்போல சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில்சில இயலாத குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வீட்டில் பணம் திருடிக்கொண்டு வந்து வாங்கி சாப்பிடுகின்றன. கண்டதை வாங்கி சாப்பிடும் நிலையில்பல குழந்தைகள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் உணவை நாய்க்குக்கொட்டி விடுகின்றன. மாலை வேலைகளில் கதை வேறு விதமாகிறது. கடைகளில் பெரிதளவில் விற்கும் பாக்கெட் சிப்ஸ், கோக் போன்ற பானங்கள்இன்று குழந்தைகளின் கைகளில் பெரிதளவு விளையாடி அவர்களது உடல்நலத்தை மிக மிக பெரிய அளவில் கெடுத்து வருகின்றன. கோக் என்பது தீங்குவிளைக்கும் தன்மை கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என எல்லோருக்கும்தெரியும். ஆனல் அதை எடுத்துச் சொல்லி தங்கள் குழந்தைகளைதிருத்துவதற்குப் பாவம் அவர்களுக்கு நேரம் இல்லை. சிலருக்கோ தைரியம்இல்லை. பலருக்கோ அக்கறையில்லை.

பெற்றோர்கள் இரண்டு பேருமே வேலைக்கு போகும் வீடுகளில் இந்தஇருவருக்குமே ஒரு விதமான குற்ற உணர்வு. எங்கே நம் குழந்தைகளை நாம்சரியாக கவனிப்பதில்லையோ, பிற்காலத்தில் பாசமில்லாமல் போய்விடுவார்களோ என, இந்த உணர்வில் அவர்கள் மேலும் பல தவறுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் எப்போது கேட்டாலும் பணம். எவ்வளவுகேட்டாலும் பணம். அது எதற்கு என்றெல்லாம் கேட்காமலேயே கொடுப்பது. கணக்கே கேட்பதில்லை. இந்த மோசமான நிலை பல குடும்பங்களில் நான்பார்க்கிறேன். ஐயோ பாவம், நம் குழந்தைதானே என்ற எண்ணம் பெற்றோர்களின்மனதில் இருக்கிறது. இந்த ஐயோ பாவம் மனப்பான்மை தேவைதான். ஆனல் இதுபல சந்தர்ப்பங்களில் குழந்தைகளை ஒட்டு மொத்தமாக கெடுத்து வருகின்றன.

ஒரு
10 வயது உடைய மகனுக்கு தந்தை ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக் கொடுத்தார். அதன் விலை என்னை வியக்க வைத்தது. ரூ.3000 இவ்வளவு விலையா என நான்கேட்டபோது இது அமெரிக்காவிலிருந்து வருகிறது. துணி மிகவும் நன்றாகஇருக்கிறது. பல நாட்கள் இந்த துணி தாங்கும். அதனல்தான் இவ்வளவு மதிப்புஎன அந்த தகப்பனர் சொன்னபோது அவர் முகத்தில் ஒரு பெருமிதம் இருந்தது. தான் மிக புத்திசாலித்தனமான காரியங்களை மட்டுமே எப்போதும் செய்பவர்என்பதை அவர் காட்டிக் கொள்வதாக இருந்தது அவரது பேச்சு.

எனக்குத் தெரிந்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில்பழமை வாய்ந்த பெரிய துணிமில்கள் பல உள்ளன. அங்கே துணியை மொத்தவிலைக்கு வாங்கி நம் நாட்டிலேயே தைத்து அதை அந்நிய நாட்டு நிறுவனங்கள்ஒப்பந்த அடிப்படையில் ஒரு அலுமினியம் அல்லது பித்தளை லேபிலை இந்தக்கால்சட்டையின் விளிம்பில் தைத்து அதை 4 அல்லது 5 மடங்கு விலைக்குவிற்கிறார்கள். அதை விடக் கேவலம் இவற்றை இந்தியாவிலேயே கொண்டுவந்து விற்கிறார்கள். அதைவிட மகா கேவலம் நாம் அவற்றைப் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி அதில் பெருமையும் கொள்கிறோம். நம்குழந்தைகளுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்கு பதிலாக நாமேஇப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறோம். அதில் பெருமையும்கொள்கிறோம். நாம் ஏதோ நம் குழந்தைகளுக்கு அதை இதை வாங்கித் தந்துஅவர்களுடைய மதிப்பையும் அன்பையும் பெறுகிறோம் என சில சமயங்களில்நாம் நினைப்பது எவ்வளவு பெரிய தவறு.

நாம்
இப்போது ஒரு அடி எடுத்துவைக்கும்போது அதே பாணியில் நம் குழந்தை பிற்காலத்தில் 16 அடி எடுத்தவைப்பதற்கு இன்றேஅதனை நாம் தயார்படுத்தி வருகிறோம். இந்த ஜீன்ஸ்துணியைப்பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சமீபத்தில் இண்டர்நெட்டில் வந்த செய்தி அது. இளைஞர்களுக்கு டைட்டாகத்தான் பாண்ட் தைத்துக்கொள்கிறார்கள்.

இது
உடலுக்கு மிகவும் கெடுதி. அதிலும் திருமணம் ஆகாத ஆண்பெண் இருவருமே இவைகளை அணியவே கூடாது. இது பிற்காலத்தில் இவர்கள்ண்ம்ல்ர்ற்ங்ய்ற் ஆவதற்கு வாய்ப்பு அதிக அளவிலே இருக்கிறது என்கிறார்கள். இந்த ஜீன்ஸ் துணியிலான ஆடைகளை மாதம் ஒருமுறை தோய்த்தால் போதும்அதனல்தான் இதனை அணிகிறோம் என சொல்கிறார்கள். வாழ்க்கையேஅர்த்தமில்லாமல் போய்விடும் வேளையில் நாம் போட்டுள்ள பாண்ட் அழுக்காகஇருந்தால் என்ன அழகாக இருந்தால் என்ன? இதை உணர வேண்டியதுபெற்றோர்களா அல்லது நம் குழந்தைகளா?

நன்றி :வடக்கு வாசல்


No comments:

Post a Comment