அன்புள்ள நண்பனுக்கு ,
நலம்.நலமறிய ஆவல்.நீ எனது பதிவுகளை படித்து வருகிறாய் என நினைக்கிறேன்.உனது கருத்துரைகளுக்கு நன்றிகள்.நண்பா இப்போது தமிழ் நாட்டில் இடைதேர்தல் விழா நடந்து வருகிறது என ஊடகங்கள் மூலமாக தெரிந்து வருகிறேன்.வந்தவாசியிலும்,திருசெந்தூரிலும் நடக்க இருக்கும் இந்த இடை தேர்தல்களில் ஜனநாயகம் மீண்டும் ஒரு பணநாயகமாக்கபட போகிறது என்பதை நினைக்கும் போது இந்த தேர்தல்கள் தேவையா என்ற கேள்வி மனதில் எழும்புகிறது.
நலம்.நலமறிய ஆவல்.நீ எனது பதிவுகளை படித்து வருகிறாய் என நினைக்கிறேன்.உனது கருத்துரைகளுக்கு நன்றிகள்.நண்பா இப்போது தமிழ் நாட்டில் இடைதேர்தல் விழா நடந்து வருகிறது என ஊடகங்கள் மூலமாக தெரிந்து வருகிறேன்.வந்தவாசியிலும்,திரு
நண்பா ! தொகுதி மக்களுக்கு நிறைய பணம் கிடைக்க போகிறது.உனக்கு என்ன? என்று நீ கேட்பது எனக்கு கேட்கிறது.இப்படியே போய் கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் நாளில் ஜனநாயகம் செத்து விடுமோ என்ற ஐயம் மனதில் எழுகிறது.மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பில் கைதான குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் பதினேழு பேரும் விடுதலை என்ற செய்தியை பார்க்கும்போது நீதி மீண்டும் ஒருமுறை சாகடிக்கபட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.நீதி துறையில் அரசியல் தலையீடு மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகி இருக்கிறது.
நண்பா ! இது வரையிலும் காசாப் பாதுகாப்பு மற்றும் வழக்குக்காக முப்பத்தி நான்கு கோடியை அரசாங்கம் செலவு செய்துள்ளது .
இந்த காசாப் அன்றைக்கு அந்த இடத்திலே சுட்டு கொல்லபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..கடந்த ஒரு வருடத்தில் அவனிடம் நடத்திய விசாரணைக்கு என்ன பயன் என்பது என்னவென்றே தெரியவில்லை .
நீதிதுறை அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல் பட்டால் தான் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது உனக்கு தெரியாதது இல்லை.ஆனால் இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் தலையீடுகளின் மூலமாக தான் தேர்வு செய்யபடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை .பதவியேற்றவுடன் முதல்வரை சந்திப்பது ஆசி பெறுவது எல்லாம் அதனுடைய தொடர்ச்சியே.
நண்பா! ஊழலில் மூழ்கி இருக்கும் அரசியல்வாதிகள் தவறுகள் செய்யும்போது இந்த நீதியரசர்களால் எப்படி நேர்மையான முறையில் தீர்ப்பு வழங்க முடியும் ?
நீதி துறையின் கருப்பு ஆடுகள் இருக்கும் வரை நியாயம் என்பது கேள்விகுறிதான் .இத்துடன் முடிக்கிறேன் .
என்றும் அன்புடன்
கருத்து சுதந்திரம்
No comments:
Post a Comment