அன்புள்ள நண்பனுக்கு ,
நலம் .நலமறிய ஆவல் .நான் கடந்த முறை உனக்கு எழுதிய கடிதத்தில் தேசிய ஒருமைப்பாடு பற்றி குறிப்பிட்டு இருந்தேன் .உனது கருதுக்களுக்கு நன்றி .ஆனால் நான் தேசிய ஒருமைப்பாடு இன்னும் பலம் பெற தமிழர்களாகிய நாம் குறைந்தது ஹிந்தியை பேசவாது கற்று கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தேன்.நான் கடிதம் எழுதிய மறுநாளே அபு ஆஸ்மி மகாராஷ்டிரா சட்டசபையில் ஹிந்தியில் பதவி பிரமாணம் எடுக்கும் பொது MNS உறுப்பினர்களால் தாக்கபட்டதை ஊடகங்கள் மூலமாக தெரிந்து இருப்பாய்.இது மிகவும் வெட்க கேடான ஒரு சம்பவம் என்பதே எனது கருத்து.
நண்பா! தமிழ் நாட்டில் ஆயிரத்து தொள்ளயிரத்து அம்பதுகளில் திராவிட முன்னேற்ற கழகம் எடுத்து போராடிய தனி திராவிட நாடு ,அறுபதுகளில் எடுத்து போராடிய மொழிகொள்கை ,ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவை பற்றி உனக்கு தெரியும் .இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தை அண்ணாதுரையால் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை தடைசெய்ய முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது . அதுமுதல் அண்ணாதுரை தன்கொள்கையை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார் .இந்த வரலாறுகள் உனக்கு தெரியும் என்று நினைகிறேன்.
நண்பா ! 1960 களில் இதேமாதிரி மராத்தியம் மராத்தியருக்கே என்று கூறி கொண்டே தென்னிந்தியர்களை குறிவைத்து தாக்கியவர்கள் சிவசேனை கட்சியினர் .ஹிந்து துவா என்ற முகமூடி அணிந்து கொண்டு மற்ற மாநிலத்தை சேர்ந்த ஹிந்துகளை தாக்குவார்கள் .அடிகொடுபவனும் ஹிந்துவே ..அடிவாங்குபவனும் ஹிந்துவே ..இதுதான் இவர்களின் ஹிந்துத்துவா.என்னை பொறுத்தவரை பிரிவினைவாதம் தீவிரவாதம் போல் வேரறுக்க படவேண்டும் .இந்த பிரிவினைவாதம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு கேடூ விளைவிக்கும் ஒரு விஷம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் .
எனது அலுவலக வேலை காரணமாக உனக்கு விரிவாக கடிதம் எழுத முடியவில்லை .அடுத்த கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன் .இத்துடன் முடிக்கிறேன் .உனது கருத்துரையை எனக்கு எழுது
என்றும் அன்புடன்
கருத்துசுதந்திரம்
No comments:
Post a Comment