அறுபதாயிரம் கோடி ரூபாய் கோடி ஊழல் என்கிறார்கள் .ஒருலட்சம் கோடி ஊழல் என்கிறார்கள் ...
நூறு ரூபாய் நோட்டை முழுமையாய் பார்க்க உச்சி வெயிலில் நின்று உழைக்கும் தெருகோடியில் வாழும் சதாரண மனிதன் வாய் பிழந்தபடி ஆச்சிரியமாய் பார்கிறான் .யார் பணத்தை யார் அடிப்பது என்று ?
குப்பனும் சுப்பனும் கட்டும் வரிபணம் கஜானாவில் நிரம்புகிறது .அதிகார வர்க்கத்தினர் குப்பன் மற்றும் சுப்பன் வியர்வையை கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் .ஊரான் சொத்தை கொள்ளை அடித்து அதிகார துஸ்பிரயோகம் செய்து பரம்பரைக்கு சொத்து சேர்க்கிறார்கள் .விளைவு ஊழலில் உலகில் இந்தியாவுக்கு எழுபத்தி இரண்டாவது இடம்.நாம் வளரும் நாடு ...நாம் நமது இலக்கை அடைய இந்த பட்டியலில் கடைசியில் அல்லவா இருக்க வேண்டும் .உலகின் வேகமான GDP வளர்ச்சியில் இரண்டாம் இடம் .ஊழல் இல்லாத நாடு பட்டியலில் இந்தியா இருந்தால் எப்படி இருக்கும் ? நினைக்கும் போதே மெய் சிலிர்கிறது .
இந்த பாழா போன அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் இந்தியா அந்த பட்டியலில் வர எப்படி விடுவார்கள்?அதுதான் மீண்டும் ஒரு ஊழலால் சந்தி சிரிக்கிறதே ...தொலைதொடர்பு துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல் .கடந்த வருடம் தொலை தொடர்பு துறையில் இரண்டாம் தலை முறைக்கான 2 G அகண்ட அலைவரிசை வழங்கியதில் தான் இத்தனை முறைகேடுகளும்.
திமுகவை சேர்ந்த மத்திய அமைச்சரான ராஜா தலைமையில் இயங்கும் தொலை தொடர்பு துறை ,தொலை தொடர்பு துறையில் துளிகூட சம்மந்தம் இல்லாத கட்டுமான துறை நிறுவனங்களான யூனீ டெக் மற்றும் லெட்டர் பேடு கம்பெனியாக இருக்கும் சுவான் போன்ற கம்பெனி களுக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன ?
மிகவும் அடிமாட்டு விலைக்கு ஒப்பந்தபுள்ளி கோராமல் சுவான் கம்பனிக்கு பதிமூன்று தொலை தொடர்பு வட்டங்களுக்கு வெறும் ஆயிரத்து ஐநூற்று முப்பத்தி ஏழு கோடிக்கும் யூனீடெக் நிறுவனத்திற்கு இருபத்தி இரண்டு தொலை தொடர்பு வட்டங்களுக்கு ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்து ஓன்று கோடி ரூபாய்க்கும் வழங்க பட்டு இருக்கிறது .
சரி ...போகட்டும் யார் வீட்டு பணமோ ?உரிமம் பெற்ற நிறுவனங்கள் என்ன செய்தன ?அவர்களுக்கு தான் தொலை தொடர்பு துறையில் அனுபமே இல்லையே .அப்புறம் எப்படி உரிமத்தை பயன்படுத்துவது ... சுவான் தனது உரிமத்தில் நாற்பத்து ஐந்து சதவீதத்தை துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்படும் Etisalat என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு நான்காயிரத்து ஐநூறு கோடி ரூபாய்க்கும்
யூனீடெக் தனது அறுபது சதவீத உரிமத்தை நார்வே நிறுவனமான Telenor என்ற வெளிநாட்டு கம்பெனிக்கு ஆறாயிரத்து நூற்று பனிரெண்டு கோடி ரூபாய்க்கும் விற்று கொள்ளை லாபம் பெற்று விட்டன .இதில் கம்பனிகள் அடைந்த லாபங்கள் பல ஆயிரகணக்கான கோடிகள்.
இவையெல்லாம் தொலை தொடர்பு துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் தான் நடந்து இருக்குமா ?
இதை ஓபன் டெண்டெர் மூலம் விற்று இருந்தால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்குமா ?
கடந்த வாரம் தொலை தொடர்பு துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் மேலும் சில கம்பெனிகளுக்கும் முறைகேடாக உரிமம் வழங்க பட்டு இருப்பதாகவும் கூறபடுகிறது.
இதை பற்றி தொலை தொடர்பு அமைச்சரிடம் கேட்டால் இதற்கு முன்னால் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் மூலம் உரிமம் வழங்கப்பட்டது என்று கூறுகிறார் .ஆனால் தொலை தொடர்பு துறை அதிகாரிகளோ தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் முடிவு என்கிறார்கள்.
அமைச்சகம் என்பதன் தலைவர் யார் ?அமைச்சர் தானே ? இதற்கு முன்னால் கடை பிடிக்கப்பட்ட விதிகள் என்று கூறி அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்த தலைமை பொறுப்பில் இருக்க கூடியவர் எப்படி தவறான முடிவை எடுக்கலாம் ?அப்படிப்பட்ட விதிகளை மாற்ற வேண்டாமா ?
இதுதான் தலைமை பண்பா?தலைமை பொறுப்பில் இருப்பவர் அரசின் வருமானத்தை பெருக்க அல்லவா செய்ய வேண்டும்.
இதற்கு முன்னால் தொலை சுக்ராம் தொடர்பு துறை அமைச்சராய் இருந்த போது நடந்த ஊழலுக்கு இன்னும் தீர்ப்பே இல்லை.
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்கள் வரிசையில் இந்த ஊழலும் சேரபோகிறது.மகா இந்திய குடிமகன்களே இதில் மட்டும் உங்களுக்கு நியாயமான தீர்ப்பு தெரியும் என்று நினைக்கிறீர்கள் ?
இதை எழுதும்போது பட்டுக்கோட்டையார் பாடல் ஓன்று நினைவுக்கு வருகிறது .
பாடுபட்டு காத்த நாடு கெட்டு போகுது
கேடுகெட்ட கும்பலாலே -நீங்க
கேடுகெட்ட கும்பலாலே
சூடு பட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே -பெரும்...சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிகிடும் வீணாராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சக செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்
சூடு பட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே -
No comments:
Post a Comment