Tuesday, October 20, 2009

காதல்- ஒரு சிறு கதை

அவன் சென்னை தி.நகர் மாம்பலம் நிலையத்தில் தாம்பரம் ரயிலுக்காக காத்திருக்கிறான் .. இந்த இடத்தில அவனை பற்றி சொல்லி ஆகவேண்டும் .அப்படி சொல்லலேன எப்படி தெரியும் அவனை பற்றி.அவன் இப்போதைக்கு வேலைஇல்லாத இன்ஜினியரிங் பட்டதாரி .இன்ஜினியரிங் எண்பது பெர்சென் பெற்றிரூ ந்தும் அவனுக்கு கேம்பஸ் இன்டெர்வியுல செலக்ட் ஆவலே.

. ....கல்லுரி முடித்து ஆறுமாசம் ஆகிவிட்டது .....அவனுடைய வேலை தேடுதலும் தொடர்கிறது ....
இன்று கூட அவன் இன்டெர்வியுக்காக தான் ரயிலுக்காக காத்து இருக்கான் .வர்ற ரயிலு எல்லாமே கூட்டமா இருக்கே என்று சலித்து கொண்டான் .இந்த இன்டெர்வியுல ஆவது வேலை கிடைக்கணும்.இந்த வருட தீபாவளி யாவது முதல் சம்பளத்தில் கொண்டாடனும் என்று நினைத்தவன் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஒரு நிமிட சிந்தனையில் மூழ்கியவன் யாரோ தன்னை அழைப்பது போல் உணர்ந்து திடுக்கன சிந்தனை தெளிந்தான் .அரக்க பரக்க சுற்றும் முற்றும் பார்த்தான்.யாரோ தன் பெயர் சொல்லி அழைத்தார்கள்..யாராக இருக்கும் என்று யோசித்தபடியே தன் இருக்கை யில் இருந்து எழும்பினான் ..
அவனருகில் ஒரு முக்காடு போட்ட பெண் உக்காந்து இருக்க கண்டான்.அவள் கூப்பிட்டு இருப்பாழோ ...என்று ஒருகணம் யோசித்தவன் ..அப்படியென்றால் என் பெயர் எப்படி தெரியும் .அந்த குரல் கூட அவனுக்கு பரிச்சியமானதாக இருந்ததே ..ரெம்பவே குழம்பினான் ..அந்த பெண்ணை நெருங்கி உற்று நோக்கினான்.அவள் வெடுக்கென திரும்பினாள்.இவள் எனக்கு நன்றாக தெரிந்தவள் ,இவள் என்னோடு நெருங்கி பழகியவள் என்று அவன் மனதில் ஒரு நிமிடம் பட்டது.

ஆமாம் ...அவள் தான் என்னுடைய யாமினி ....அவன் இதயம் படபடத்தது .அதே நேரம் அவளோ அவன் முகத்தை பார்க்கவே தயங்கினாள்..

யாமினி ...அவன் வார்த்தைகள் வெளிவர முடியாமல் தவிக்கிறது ...அவள் கண்களில் கணீர் வெளிவர அவளாலும் பேச முடியவில்லை .ஒருநிமிடம் இருவருக்குள்ளும் எந்த வார்த்தையும் பேச முடியவில்லை .. அவள் கண்களில் கண்ணீர் நிறைய வார்த்தைகள் வெளிவராமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து
கொண்டனர்.

யாமினி இப்போது ரெம்ப இளைத்து போயிருந்தாள்.அவளும் அவனும் நாமக்கல் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்தவர்கள் .அவளுடைய காந்த பார்வையில் தான் அவன் தன்னை இழந்தான் ..ஆனால் இப்போது அந்த பார்வையில் காந்தம் இல்லை .வெறும் சோகமே அப்பி நிற்கிறது .ஆம் இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலர்கள்.காதல் என்றால் சதாரண காதல் இல்லை ..இருவரும் பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் .ஆகையால் அவர்களுடைய காதலுக்கு பள்ளியில் யாரும் எதிர்ப்பில்லை .ஒருகணம் நிதானத்துக்கு வந்த அவன்
'யாமினி உனக்கு என்ன ஆகிவிட்டது " அவன் மெதுவாக கேட்டான்.

அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.அவளை சிறு குழந்தையை கட்டி அணைப்பதுபோல் அணைத்து அவன் தோள்களில் சாய வைத்து அவள் முதுகில் வருடியபடி ஆறுதல் சொல்ல நினைக்கிறான் .ஆனால் ஏதோ ஓன்று தடுக்க அவள் முகத்தையே பார்த்தபடி தயக்கமுடன் நிற்கிறான் .

"யாமினி ஏதாவது பேசேன்" அவன் மீண்டும் அவளிடம் கேட்டான் .அவள் அழுதபடி இருந்தாள்..

அவனும் அவளும் பிளஸ் டூ முடித்தபிறகு மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து முதலாண்டு படித்து கொண்டு இருக்கும் போது இவர்கள் காதல் அவளுடைய அப்பாவுக்கு தெரிய வர இவள் கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்கள்.காதல் வானில் பாடி திரிந்த அந்த பறவையின் சிறகுகள் ஒடிக்கப்பட்டு வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டது .அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவளை பிறகு பாக்கவோ சந்திக்கவோ முடியவில்லை .இருவரும் வெவ்வேறு சாதியாக இருந்ததால் அவள் அப்பனுக்கு சமுக கௌரவ பிரச்சினையாகிவிட்டது.

அவள் பிரிவு அவனை ரெம்பவே பாதித்தது .முதலாண்டு கல்லுரி படிப்பை உதறி விட்டான்.அவனின் நிலையை கண்ட அவன் பெற்றோர் மிகவும் கலங்கினர் .அவன் அப்பா அவனுக்கு பல அறிவுரைகள் வழங்கினார்.நாட்கள் செல்ல செல்ல அவன் சதாரண நிலைக்கு திரும்பினான்.கொஞ்சம் நட்களுக்கு அப்புறம் அவளுக்கு அவள் மாமா பையனுடன் கல்யாணம் ஆகிவிட்டது என்று அவள் தோழி மூலமாக தெரிந்தான் .அதன்பிறகு இப்பதான் அவளை இந்த கோலத்தில் பார்கிறான் .

"கடவுளே என்ன சோதனை இது .வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக நீ இருக்க வேண்டும் என்று உனக்காக ப்ரேயர் பண்றேனே யாமினி ...ஏன் உனக்கு இப்படிஆகி விட்டது .உன்னுடன் யாரும் வரவில்லையா ? "என்று அவன் கேட்க ,

"அப்பா வந்து இருக்கார் .அவர் கடைக்கு போயிருக்கார் "என்று அவள் சொல்லிவிட்டு அப்பா வருகிறாரா என தன் பார்வையை சுழலவிட்டு அவனை தவிர்க்க முயற்சித்தாள் .

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை .என்ன நடக்கிறது ?அவள் அப்பா வந்துவிட்டார் .அவரால் அவன் முகத்தில் முழிக்க முடியவில்லை .அவர் எங்கையே பார்த்தபடி தன் மகளிடம் பேசினார் .

"அங்கிள் எப்படி இருக்கீங்க?அவனே வினவினான் .அவரால் அதற்கு பதில் சொல்ல இயலவில்லை .
"யாமினிக்கு என்னாச்சு அங்கிள் ?ஏன் அவள் இப்படி இளைத்து போய் சோகமாக இருகிறாள் ?"

அவர் கண்களில் கண்ணீர் நிரம்ப ."என்னை மன்னித்து விடுங்கள் தம்பி."என்றவர் அவன் கைகளை பற்றி தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.

"என்னுடைய கௌரவத்துக்காக என் பொண்ணு வாழ்கையை நானே தொலைசுட்டேன் தம்பி .உங்க காதலை பிரிபதற்காக அவசரப்பட்டு அவள் மாமா பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் .அவனை ரெம்ப நல்லவன் என்று தான் நினச்சு இருந்தேன் .ஆனா அந்த பாவி பய கண்ட கண்ட பொண்ணுங்ககிட்ட தொடர்பு வச்சிட்டதால எய்ட்சு வந்து போன மாசம் செத்து போயிட்டான் ..இப்ப இவளுக்கு டெஸ்ட் பண்ணினப்போ எச்ஐவி பாசிட்டிவ்வுன்னு ரிசல்ட் வந்துருக்கு " என்று சொன்னவர் அப்படியே தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார் .

அவனுக்கு ஒருகணம் தலையே சுத்தியது .பேயறைந்துதது மாதிரி உணர்ந்தான்.வார்த்தைகள் வரவில்லை .கேவி அழும் யாமினியை பார்கிறான் .அவள் கண்களில் கண்ணீர் வற்றி போயிருந்தது .அவள் அழுது அழுது கண்கள் கண்ணீர் வற்றி பாலைவனம் ஆகி இருக்கலாம் .

எப்படி வாழகூடாது .எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை ஆகக்கூடாது என்று அவன் நினைப்பாநொ அந்த வாழ்க்கை அவன் நேசிப்பவளுக்கு ஆகி விட்டதே ..அவனால் ஜீரணிக்க முடியவில்லை .,

"யாமினி ஏதாவது பேசு .எச்ஐவி ஓன்னும் மனிதனை கொல்லாது.நீ கவலை படாதே ..நான் உன்னை பார்த்து கொள்கிறேன் .உனக்கு தேவை இப்போது அன்பு கட்டும் ஒரு இதயம் .அது எப்போதும் உனக்காக என்னிடம் இருக்கிறது .நீ என்னுடன் வா " என்று அழைக்க அவளோ சலனமில்லாமல் உக்காந்து இருகிறாள் .

"தம்பி நீங்க தெய்வம் மாதிரி .நான் தான் என் பொண்ணு வாழ்க்கையை தொலைச்சிட்டேன் .நான் உங்க மனச புரியாம உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் .ஆனா நீங்க அதை மனசுல வைக்காம என் பொண்ணை கூட வைச்சு பார்க்கிறேன் என்று சொல்லுறிங்களே .உங்க காதல் எவ்வளவு உண்மையானது என்று புரிஞ்சிட்டேன் " என்றபடி அவன் காலில் விழுந்தார் .

அவரை தொட்டு தூக்கிய அவன் "அங்கிள் நீங்க என் காலில் விழுந்துட்டு...என்று வார்த்தையை முழுங்கிட்டு "ஒன்றும் கவலை படாதீங்க" என்று ஆறுதல் கூறினான் .

இனிமேல் அவளுக்காக வாழ வேண்டும் .அவளுக்காக சரியான சிகிச்சை பெற்று தரணும் என்று திடமான முடிவோடு அவளை நோக்க ...அவளோ வெற்று பார்வையுடன் எங்கோ வெறித்தபடி உக்காந்து இருந்தாள் .

தன்னலம் கருதாது காதலியின் நலம் கருதும் உண்மையான "காதல்" இது

1 comment: