Monday, October 19, 2009

நண்பனுக்கு ஒரு கடிதம் 1

அன்புள்ள நண்பனுக்கு ,
நான் நலம் .அதுபோல் அங்கு நீயும் உன் குடும்பத்தினரும் நலம் என நம்புகிறேன் .நான் ரெம்ப நாட்களாகவே உனக்கு கடிதம் எழுதணும் என்று நினைத்து இருந்தேன் .ஆனால் அலுவலக வேலை காரணமாக கடிதம் எழுத நேரம் கிடைக்கவில்லை ..நான் என்னுடைய ஓய்வு நேரங்களில் நமது நட்பை பத்தியும் நாம் நமது சிறு வயது வாழ்க்கை பற்றியும் நினைத்து சிலிர்ப்பது உண்டு .

நாம் பள்ளிக்கூடம் செல்லும்போது தங்கையன் மாந்தோப்பில் ஒருநாள் நீயும் நானும் மாங்காவை திருட போய் அவன் மவன் நம்மை புடித்து மாமரத்தில் கட்டி வைத்து என்னோட அப்பாவை வரவைத்து அப்பாவிடமிருந்து பிரம்பு அடி வாங்கிய நா நீ நினைத்து பார்பதுண்டா ? இந்த சம்பவத்தை நினைக்கும் போது அப்பா அடித்த இடத்தை கையால் தடவி பார்ப்பேன்.இந்த சம்பவம் தான் என் மனதில் அடுத்தவர் பொருளின் மீது ஆசை வைக்க கூடாது என்ற ஒரு பாடத்தை போதித்தது. அப்பாவும் அம்மாவும் தான் உலகின் முதல் ஆசிரியர் என்பது மறுக்க முடியாத உண்மை .
அன்பு நண்பா ! கவலை இல்லாத எதை பத்தியும் வருத்தபடாதா அந்த சிறு வயது வாழ்கைக்கு திரும்ப செல்லவே எனது மனம் விரும்புகிறது .கள்ளம் கபடம் இல்லாத வாழ்க்கை பற்றிய கவலை இல்லாத அனைவராலும் அன்பு காட்டபடுற அந்த வாழ்க்கை பத்தி நீ நினைப்பது உண்டா ?ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் அப்பாவின் அலுவலக இடமாறுதல் காரணமாக நான் உன்னை பிரிய நேர்ந்தபோது நான் என் வீட்டில் இரண்டு நாள் சாப்பிடாமல் அடம் பிடித்து மீண்டும் உன் வீடிற்கு வந்ததை இப்போதும் என் அம்மா அடிகடி சொல்வார்.அப்போது விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போது உன்னை காண வருவேன் .அப்போது தினவும் விடுமுறை வரணும் உனக்கு பத்து பைசா காணிக்கை போடுறேன் என்று நம்மமூரு கருப்ப சாமிகிட்டே வேண்டி கிட்டது இப்பவும் எனக்கு ஞாபகம் வரும் .
அடுத்த இரண்டு வருடங்களில் அப்பாவுக்கு அதே ஊரில் மாறுதல் கிடைக்க திரும்பவும் உன்னுடன் எட்டாம் வகுப்பில் வந்து சேர்ந்து விடேன்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது நாட்டு நலபணி திட்டத்தின் (N.S.S) மூலம் நாம் ஒரு ஊருக்கு ரோடு போட்டு கொடுத்தோம் .
அந்த ஊர்மக்கள் ரெம்பவும் மகிழ்ந்து நம் டீமை ரெம்ப புகழ்ந்து பாராட்டினார்கள் .அப்போது நான் மிகவும் மகிழ்ந்தேன்.

இதே மாதிரியான N.S.S மற்றும் N.C.C பயிற்சிகள் மற்றும் கேம்புகள் கண்டிப்பாக பள்ளிக்கூடங்களில் தேவை .ஆனால் அதை பற்றி முழுமையான பயிற்சிகள் எல்லா பள்ளிக்கூடங்களிலும் சொல்லித்தருவதில்லை.வெறும் புத்தக படிப்பு மட்டும் ஒரு மாணவனை சிறந்த குடிமகனாக மாற்றாது.புத்தக படிப்போடூ வாழ்க்கை கல்வியையும் போதித்தால் தான் அந்த மாணவனால் சமுகத்தில் எதையும் தாங்கும் இதயம் கொண்டவனாக சமுக பிரச்சினைகளை எதிர் கொள்பவனாக வருவான்.நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒழுக்கம் போதிப்பவனாக இருப்பான்.

அன்பு நண்பா! நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது நாமனைவரும் இணைந்து ஆரம்பித்த Blood donar association உன் வீட்டிலும் என் வீட்டிலும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது ஞாபகம் இருக்குதா ?என் அப்பா டாய நீ ஸ்கூலுக்கும் போகவேண்டாம் ...படிச்சு கிழிச்சதெல்லாம் போதும் என்று எதிர்ப்பு காண்பிச்சாரே ..உன் அப்பாவும் அதே மாதிரி தானே குதிச்சார்.அப்போது நமக்கு இருந்த ஒரே ஆதரவு பார்வதி டீச்சர் தான்.இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் .நீ அவங்களை பார்த்தால் நான் ரெம்ப கேட்டதாக சொல்.அவர்கள் தான் நமக்கு முழு ஆதரவு தந்ததோடு தலைமை ஆசிரியரிடமும் நம்மளை பற்றி சொல்லி ஸ்கூல் அசெம்ப்ளியிலும் சொன்னார்கள் .நாம் அவங்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டு இருக்கிறோம் .பிள்ளைகள் சமுக பிரச்சினைகள் பற்றி பேசும்போதோ அல்லது சமுக இயக்கங்கள் உருவாக்கும் போதோ எத்தனை பெற்றோர்கள் ஆதரிக்கிறார்கள் .இல்லை யாருமே ஆதரிப்பது இல்லை .அரசியல் என்பது கெட்ட வார்த்தையாக போதிக்கபடுகிறது.கொள்ளை அல்லது கொலைகாரன் தான் அரசியல்வாதி யாகனும் என்ற நிர்பந்தம் சமுகத்துக்கு ஏற்பட்டுவிட்டது .இது ஒரு அடிப்படை சமுக கோளாறு .

அன்பு நண்பா!மக்கள் சேவையே மகேசன் சேவை என்று முழங்கும் அரசியல் வாதி மேல் எனக்கு கோபம் வருகிறது .ஆனாலும் அவர்கள் சரியாக தான் சொல்லுகிறார்கள் .நாம் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம் .அவர்கள் மக்கள் என்று சொல்லுவது நாட்டு மக்களை அல்ல அவர்கள் சொந்த மக்களை .அவர்கள் தன் மக்களுக்கு சொன்னபடி சேவை செய்கிறார்கள். சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் மேலாகியும் இன்றும் நாம் சமமான பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை .நகரங்கள் வளர்கின்றன .கிராமங்கள் தேய்கின்றன என்ற நிலையில் தான் இருக்கிறோம் .நம் இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் உயிர்நாடியான கிராமங்களில் தான் இருக்கிறது என்று சொன்னார் மகாத்மா காந்தி .ஒட்டுமொத்த GDP வளர்ச்சியில் உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாம் தனி நபர் வருமானத்தில் நூற்றி நாற்பத்தி இரண்டாம் இடத்தில் இருக்கிறோம் .

இவை மாறவேண்டுமானால் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் .நகரங்களில் இருக்கும் வளர்ச்சி கிராமங்களில் பரப்பப்படவேண்டும் .இந்த பரப்புதல் இப்போதைய தகவல் தொழில் நுட்ப புரட்சியில் சாத்தியமே ...

அன்பு நண்பா ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் உனக்கு கடிதம் எழுதிகிறேன் .இனி வரும் கடிதங்களில் நம்முடைய இளவயது நினைவுகளுடன் செய்திகளையும் விமர்சனம் செய்ய போகிறேன் .உனது கருத்துகளையும் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன் உனது நண்பன்
கருத்து சுதந்திரம்

No comments:

Post a Comment