Thursday, October 22, 2009

படிப்போம் வாருங்கள்

இன்றைய சூழ்நிலையில் இயந்திரமான விஞ்ஞான உலகில் கல்லூரிப் படிப்பை முடித்து வேலையில் அமர்ந்தவுடன் அனுதினமும் படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் நமது முன்னோர்கள் அல்லது பெற்றோர்கள் இன்றளவும் அனுதினமும் அலுவலக வேலையை முடித்துவிட்டு மாலை நேரங்களில் ஊர் பொது நூலகம் சென்று நூல்களை அல்லது அன்றைய செய்திகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு எல்லா சகல வசதிகளும் வீட்டில் உள்ள கணிப் பொறியிலேயே கிடைக்கிறது. உதாரணமாக, அனைத்து செய்தித்தாள்களும் தங்களது செய்திகளை வலைதளத்தில் இடுகிறது மற்றும் அனைத்து தமிழ்நூல்களும் மின்-புத்தகங்களாக மாறிக் கொண்டே உள்ளன. அனைத்து வசதிகளும் நாம் இருக்கும் இடத்திலேயே ஒருங்கே கிடைக்கப் பெற்றும் நம்மில் பலர் தினமும் படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது இல்லை.

நண்பர்களே! நாம் மாறுவோம்!! தினமும் குறைந்தது அரை மனி நேரமாவது நல்ல கருத்துள்ள நீதி நெறி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான நூல்களைப் படிப்பபோம். நாம் படிப்போம். நம் நண்பர்களை படிக்க வைப்போம்!!. நமது இந்த இளைய சமுதாயத்தின் மாற்றம் நம்மிள் நாம் அனைவரும் ‘அறிவுத் தீ’ கனலாக மாறுவோம். ஓர் ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குவோம்.

இத்தகைய ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைக்கக்கூடிய கல்வியை பற்றிய மற்றவர்களின் கருத்துக்களையும் ஆராய்வோம்.

அதிவீரராம பாண்டியன் தனது ‘வெற்றி வேட்கை’ என்ற நூலில் கூறியது.

“கற்கை நன்றே! கற்கை நன்றே!!

பிச்சை புகினும் கற்கை நன்றே!!”

அதாவது பிச்சை எடுத்தாவது படிப்பினை தொடர வேண்டும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கூறுவது:

யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

விளக்கம்: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.

காஞ்சிபுரத்திலே பிறந்து, தம் கல்வியால், பேச்சாற்றலால் மற்றம் எழுத்தாற்றலால் தமிழக முதல்வராக விளங்கிய அறிஞர் அண்ணாவின் வாழக்கையே ஒரு சான்று. ஒரு முறை அவர் முதல்வராக இருந்த போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். அப்பொழுது அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் ‘வெள்ளிக்கிழமை’ அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டு இருந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவே இரண்டு நாட்கள் தள்ளிப் போட கேட்டுக் கொண்டார். காரணம், “நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்கள் கிடைத்தால் அதனை நான் முழுமையாக வாசித்து விடுவேன்” என்று சொன்னார்.

சிறுகூடல் என்னும் கிராமத்தில் பிறந்து, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பை படித்தவர் கவியரசு கண்ணதாசன். இறக்கும் வரையிலும் விடாது பல்வோறு நூல்களைக் கற்று புலமை பெற்றவர். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அரசியல், ஆன்மீகம், மதம் பற்றிய ஆய்வு, நாடகம், இலக்கியம், சினிமாத்துறை என் பல துறையிலும் தனது முத்திரையைய் பதித்தவர்.

“இது போன்று எத்தனையோ உதாரணங்களை கூறலாம். வாருங்கள் நண்பர்களே தினமும் படிப்போம். புதிய சகாப்தம் படைப்போம்”.


-

No comments:

Post a Comment