Friday, November 5, 2010

டாஸ்மாக் தமிழகத்தின் சாபக்கேடு


TASMAC-Tamil Nadu state marketting corporation ,என்ற இந்த செல்ல பெயர் தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்பும் காமதேனு .மனைவியின் தாலியை அறுத்து எடுத்து விற்றோ அடமானம் வைத்தோ குடிக்கும் குடி மகன்கள் ஏராளமானோர்.குடியால் நடு தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம் .குடி குடியை கெடுக்கும் என்று அரசாங்கமே விளம்பரம் செய்துவிட்டு அந்த மதுவை விற்பது பெரிய விந்தை.இதற்க்கு முன்னால் மதுக்கடைகள் தனியார் வசம் இருந்தது .

2003
ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய முதலமைச்சர் .ஜெயலலிதாவால் ஆரம்பிக்க பட்ட டாஸ்மாக் வருடா வருடம் தனது வருமானத்தை பெருக்கி வருகிறது.டாஸ்மாக் வருமானம் பெருகி வருவதை அரசு பெருமையாக கூறி கொள்வதை ஏற்றுகொள்ள முடியாது .

டாஸ்மாக் வருமானம் அதிகரிக்கிறது என்றால் தமிழ் நாட்டில் குடிபழக்கம் அதிகமாகிறது என்று தான் அர்த்தம் .தமிழ் நாட்டில் இன்று கல்லுரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் குடிபழக்கம் வேகமாக பரவி வருகிறது என்று சமூகவியலார் அச்சம் தெரிவிக்கின்றனர் .ஆனால் அரசு அதை பற்றி கவலை படுவதாக தெரியவில்லை .டாஸ்மாக் கின் 26 வது வருடாந்திர அறிக்கை படி 2003 -2004 ஆண்டு விற்பனை Rs.4,262.58 கோடிகள்.மார்ச் 2009 இல் விற்பனை Rs.12,831.21கோடிகள்.எவ்வளவு வளர்ச்சி ?

தற்போது தீபாவளிக்கு டாஸ்மாக் நிறுவனம் 300 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயித்து உள்ளது .டாஸ்மாக்கின் விற்பனை வளர்ச்சியை பார்க்கும் போது தமிழ் நாட்டு இளைஞர்கள் மிகவும் அதிகமாக குடி பழகத்திற்கு அடிமை ஆகி வருகிறார்கள் .மற்ற அரசு நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கி வரும் வேளையில் டாஸ்மாக் மட்டும் மிக வளர்ச்சி அடைந்து வருகிறது.இதே போல் மற்ற நிறுவனங்களுக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கலாம் .ஆவின் நிறுவனத்தின் மூலம் புது வகையான பால் இனிப்புகளை பண்டிகை காலங்களில் அறிமுகம் செய்யலாம் .கோ-ஆப்-டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யும் பட்டு துணிகளுக்கு விற்பனை நிர்ணயிக்கலாம் .ஆனால் அதை தவிர்த்து உடம்பை கெடுக்கும் சமுகத்தை நாசம் செய்யும் மது வகைகளுக்கு இலக்கு நிர்ணயிப்பது சமூகத்தை கெடுக்கும் செயலாகும் .

ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக் கடைகள் மூலம் ஏழைகளிடம் இருந்து பெறப்படும் பணத்தில் தான் இலவச தொலை காட்சி பெட்டி மற்றும் இலவசங்கள் அனைத்தும் வழங்கபடுகிறது.4000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்ட இலவச தொலைகாட்சி திட்டம் போன்றவற்றிக்கு செலவழிக்கப்பட்ட பணம் லச்சகணக்கான தாய்மார்களின் மனைவிகளின் கண்ணீரில் வந்ததாக இருக்கலாம் .செயல் படுத்தும் திட்டங்களை கல்வி ,சுகாதாரம் ,அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றிக்கு செலவிட்டு இருந்தால் உலக தரத்திற்கு இணையான கல்லூரிகள் ,பள்ளிகள் ,மருத்துவமனைகள் ,நவீன சாலைகள் போன்றவற்றை தமிழகம் பெற்றிருக்கும் .

வெறும் லாபத்தையும் அரசு கஜானாவையும் நிரப்ப வேண்டும் என்ற குறிகோளுடன் மட்டுமே செயல்பட்டு விற்பனை இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுவது தொடருமானால் டாஸ்மாக் ஊழியர்களே ஒவ்வொரு வீடாக சென்று விற்பனை செய்யும் நிலை ஏற்படும் .அப்போது உலகிலே தமிழ்நாட்டில் தான் அதிகமாக குடிக்கும் இளைஞர்கள் இருப்பார்கள் .அதை கலைஞர் தொலைகாட்சியும் சன் தொலைகாட்சியும் சர்வே எடுத்து ஒளிபரப்பி பெருமை பட்டு கொள்வார்கள் .இந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்க தேன்றுகிறது .

No comments:

Post a Comment