Thursday, November 4, 2010

மூடி மறைக்க முயலும் மிகப்பெரிய டெலிகாம் ஊழல் ......


இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மிக சிறந்த நல்லாட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் ஜனநாயக முறைப்படி ஆட்சியாளர்களை தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று அன்றைய தலைவர்கள் உருவாக்கிய மக்களாட்சி தத்துவம் செத்து விடுமோ என்று அஞ்ச தோன்றுகிறது. சிறந்த பெருளாதார வல்லுநர் சிறந்த நிர்வாகத்தை நடத்தி செல்பவர் ,உலக அரங்கில் இந்தியாவை அனைவரும் பாராட்டும் வகையில் வழி நடத்தி செல்பவர் என்றல்லாம் போற்றப்படும் தலைவரின் ஆட்சியில் நடந்த மெகா ஊழலான டெலிகாம் மற்றும் காமன்வெல்த் ஊழல்களால் போன்றவை மிக பெரிய கறையை உருவாக்கி உள்ளன.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெü னம்?இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின.

இந்த ஊழலை அம்பலபடுத்தியதும் எதிர்கட்சிகள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் .ராசா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள் .ஆனால் நமது முதலமைச்சர் ராசா தாழ்த்தப்பட்ட இ
த்தை சேர்ந்தவர் ஆகையால் அவரை பதவி விலக சொல்கிறார்கள் என்று பேசி ஒரு ஊழல் வாதியை காப்பாற்ற முயல்கிறார் .நானூறு கோடி ரூபாய் போபர்ஸ் ஊழலுக்காக நாடு முழுவதும் போபர்ஸ் பீரங்கியின் காகித மாதிரிகளை வைத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் ,வேலை நிறுத்தங்கள் நடத்தியும் கண்டன பேரணிகள் நடத்தியும் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சியை ஆட்சி இழக்க செய்த எதிர்கட்சிகளின் அணுகுமுறை இந்த மிகப்பெரிய ஊழலில் பெருத்த ஏமாற்றமே ...

இந்த வழக்கில் தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு தலைவர் மிக தெளிவான அறிக்கையை அளித்து இருக்கிறார் .இந்த ஊழலின் பின்னணியில் அமைச்சர் குற்றவாளியாக தெரிகிறார்.ஆனால் அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் தொடர்கிறார் என்றால் நாம் எப்படி நியாயமான விசாரணையை எதிர்பார்க்க முடியும் .
நம்முடைய கடைசி நம்பிக்கை நீதி மன்றங்கள் தான்.இந்த வழக்கில் நீதிபதிகள் சி.பி.ஐ யின் மீது கண்டனம் தெருவித்து இருக்கிறார்கள் .ஆளும் கட்சியின் கைபாவையாக
சி.பி.ஐ செயல்படுகிறது என்று பரவலான எண்ணம் உள்ளது.அதை நிருபிப்பது போலவே அதன் செயல் பாடுகள் உள்ளதோ என்ற சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது .

இதற்கு முன்னால் நடந்ததாக கூறப்படும் ஊழல்களுக்கே தீர்ப்புகள் வராத பட்சத்தில் இந்த வழக்கும் அந்த பட்டயலில் இணையபோகிறது .ஆனால் மக்கள் அமைதியா நடப்பதை கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

இந்த ஊழல் நடக்காமல் நேர்மையாக ஒதுக்கீடு நடந்து இருந்தால் இந்த
இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.நினைக்கும் போதே சிலிர்கிரதே .........

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?.உண்மையான குற்றவாளி தாழ்த்தபட்டவன் ஆனாலும் சரி .. பிற்படுத்த பட்டவன் ஆனாலும் சரி ..அல்லது உயர் வகுப்பை சேர்ந்தவனாலும் சரி நிச்சயமாக தண்டிக்க படவேண்டும் ...



No comments:

Post a Comment