Saturday, July 10, 2010

60 ஆண்டுகளாகியும் தள்ளாடும் பள்ளிக் கல்வி முறை

கீழே வருவது ஒரு பள்ளியின் மேலாளர் மற்றும் அந்தப் பள்ளியில் தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கைக்கு சென்றிருக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர் இடையே நிகழும் சம்பாஷணை.

எங்களது பள்ளியில் சேர்க்கை வேண்டுமென்றால் குறைந்தது உங்கள் குழந்தைக்கு நீங்கள் 25 Rhymes சொல்லி கொடுத்திருக்க வேண்டும், 500 வரை எழுதவும் படிக்கவும் அந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்க வேண்டும், ஆங்கிலம், உறிந்தி மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி இவை மூன்றிலும் alphabets தெரிந்திருக்க வேண்டும். இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா எனக் கேட்கிறார் அந்த ஆங்கிலப்பள்ளி மேலாளர்..

எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பெற்றோர் எல்லாவற்றிற்கும் பலமாகவும், மகிழ்ச்சியாகவும் தலையாட்டினர். இது தெரிந்தே 2 வயது முதலே அந்த குழந்தைக்கு ஒரு டியூஷன் ஏற்பாடு செய்து அந்த குழந்தையை பலமாக தயார் செய்திருந்தனர்.

இதெல்லாம் சரியாக இருந்தும் அந்தக் குழந்தைக்கு அந்தப் பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்தக் குழந்தையின் தந்தை பட்டப்படிப்பை முடிக்கவில்லை, தாயார் 12ம் வகுப்புதான் தேறியிருந்தார்.

அந்தப் பள்ளியில் குழந்தைக்கு சேர்க்கை வேண்டுமென்றால் பெற்றோர்கள் இருவரும் குறைந்தது ஒரு டிகிரியாவது கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியைப்பற்றி.

அடுத்தது எங்கள் கேம்பிரிட்ஜ் பள்ளியில் படித்த ஒரு மாணவன், 10ம் வகுப்பில் 500க்கு 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர், புத்திசாலி மாணவர். அவருடைய தந்தை ஒரு IAS அதிகாரி, இந்த சமயத்தில் சென்னைக்கு மாற்றலாகினார். ஒரு நல்ல பள்ளியில் தன்னுடைய மகனை சேர்க்கப் போனார்.

அங்கு அவருடைய மகனுக்கு ஒரு அனுமதி தேர்வு நடக்கிறது. சுலபமாக அந்த மாணவருக்கு அந்த பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை. இந்த அதிகாரியோ மிகுந்த நேர்மையானவர். அவர் நினைத்திருந்தால் யாரையாவது அணுகியோ, தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தியோ அவரது மகனுக்கு இடம் பெற்றிருக்கலாம். அந்த மாணவர் 475 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியிருந்தால் சுலபமாக அந்த பள்ளியில் இடம் கிடைத்திருக்குமாம். இது தெரிந்து அந்த அதிகாரி மிகவும் வருத்தமடைந்தார். தொலைபேசியில் என்னுடன் பேசி "என்ன இப்படி செய்கிறார்கள், என் மகன் நல்ல மதிப்பெண்களைத் தானே பெற்றிருக்கிறார். இதற்கு மேல் என்ன செய்ய முடியும். 475 மதிப்பெண்களுக்கு மேல்தான் மாணவர்களை சேர்ப்போம் என்றால், இதுதான் இந்த பள்ளியின் சிறப்பம்சமா? இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் திறமை இவ்வளவுதானா? 12ம் வகுப்பில் மாநிலத்தில் முதலாவது, இரண்டாவது வருகிறது எங்கள் பள்ளி என சொல்லும் போது, அதில் இந்த பள்ளிகளின் பங்கு என்ன பெரிதாக இருக்கப் போகிறது'' என சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.

இதைப்போன்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு சேர்க்கை கிடைக்க பெற்றோர்கள் கையில் பெரிய தொகையுடன் வருடந்தோறும் அலை மோதுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் பல பள்ளிகள் அப்படியல்ல. எப்படி சுமாராக இருந்தாலும் குழந்தைகளை சேர்த்துக் கொண்டு அவர்களை பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைய வைக்கிறார்கள். வெறும் 25 அல்லது 35% மதிப்பெண்கள் பெறும் திறன் பெற்ற குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்த்து அந்த மாணவர்களை 55 அல்லது 65% பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுமளவிற்கு தயார் செய்து வரும் பள்ளிகள் நம் நாட்டில் ஏராளமான அளவில் உள்ளன. ஆனால் ஏனோ தெரியவில்லை, பொது மக்களுக்கு இதைப் போன்ற பள்ளிகளை மனதார அங்கீகரிப்பதில்லை. ஆனால் உண்மையிலேயே இதைப்பேல பள்ளிகளில்தான் கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இதைப் போல ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகங்களையும் தான் நாம் மனதார பாராட்ட வேண்டும்.

ஒரு திறமையான மாணவரை சேர்த்து அவரை அதிக அளவில் மதிப்பெண்கள் பெறவைத்தால், இதில் நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது? இதை ஆங்கிலத்தில் மிகவும் அழகாக சொல்வார்கள். அதாவது we are capable of turning horses into horses, not donkeys into horses.

ஏதோ இன்றைய நாளை ஓட்டினால் போதும் என்ற நம்முடைய மனோபாவம்தானே இது? யார் உண்மையான உழைப்பாளி, எது உண்மையான கல்வி ஸ்தாபனம் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? நமக்கேன் இவ்வளவு ஆராய்ச்சி, ஏதோ நம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தோமா, எப்படியோ படித்தார்களா, அவர்களுடைய வாழ்க்கை ஏதோ மேம்பட்டால் போதும் என்றஅந்த "ஏதோ'' என்ற எண்ணம் நம்முள் இருப்பதால்தான் நம் நாட்டில் பள்ளிக் கல்வி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இப்படித்தான் கல்வி இருக்க வேண்டும், கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்று வரையறுக்க நம் அரசாங்கம் இருக்கிறது, பல திட்டங்கள் போடப்படுகின்றன, கோடிக்கணக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையிலேயே ஒரு மாணவனுக்கு இந்த வயதில் இதுபோல கல்வி வேண்டும், கல்வி நிறுவனங்கள் இப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறையை பெற்றோர்களும், கல்வியாளர்களும் அரசாங்கமும், சேர்ந்து எடுக்க வேண்டும் என நான் மனதார நினைக்கிறேன்.

பல விஷயங்கள் ஒருவராக எடுத்து, பின்னர் அதை பின் பெறப்பட்டு, சில சமயம் நீதி மன்றங்களுக்கு சென்று பின்னர் ஆரம்ப நிலைக்கே வந்தடைந்துள்ளன. இதனால் நேரம் மிகுந்த அளவில் விரயமாகிறது. இனியும் இந்த நிலை நீடிக்க கூடாது.

தாய் மொழியில்தான் 10 வயது வரை படிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டது ஒரு மாநிலம். இந்த பாடத்தைத்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்டது வேறொரு மாநிலம். இந்த மொழியை சொல்லிக் கொடுக்கக் கூடாது, இதுதான் படிக்க வேண்டும் என பலவாறு பல சட்டங்கள் பல மாநிலங்கள் போட்டன, போட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும்கூட ஒரு சில மாநிலங்களில் 3.5 வருடங்கள் ஆனால்தான் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள். வேறு சில மாநிலங்களில் 3 வயது ஆனாலே சேர்த்துக் கொள்கின்றன. இப்படி இன்னும் நம் நாட்டுப் பள்ளிக் கல்வி ஒரு சீர்மைக்கு வரவேயில்லை, எதிர்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையுமில்லை. ஒரு வேளை பள்ளிக் கல்வியை அந்தந்த மாநில நிர்வாகத்திடம் இருப்பதால் இந்த நிலையோ?

ஒரு மாணவன் ஒரே மாநிலத்தில் முதல் 15 வருட படிப்பை படித்து முடிப்பார் என எதிர்காலத்தில் சொல்ல முடியாது. 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இன்றில்லை. இதை மாநில அரசும் மத்திய அரசம் உணர்ந்து உடனடியாக ஒரு நல்லதொரு கல்வித்திட்டத்தை நாட்டுக்கு வழங்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று விதங்களில் மட்டும் நம் பாடத்திட்டம் இருந்தால் போதுமானது. அதைவிட்டு இன்று நூற்றுக்கணக்கணக்கான கல்வி முறைகள் நம் நாட்டில் இருக்கின்றன. இதனால் மக்கள் அடையும் சிரமத்திற்கு அளவேயில்லை, இதுவேதான் வேறு வகையில் மக்களை சென்றடைந்து அவர்களை எந்தவிதமான சிந்தைனைக்கும் எட்டாதவாறு செய்கிறது என நான் நினைக்கிறேன். மத்திய அரசு உடனடியாக மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து வருங்காலத்தை மனதில் வைத்து நல்லதொரு கல்வி திட்டத்தை, குழந்தைகளின் வருங்காலத்திற்கு மிகவும் பயனள்ளதாக அளித்து, கடந்த 60 வருடங்களாக பள்ளிக் கல்வியின்பால் நம் நாடு கவனம்செலுத்தவில்லை என்ற எண்ணத்தை மக்களின் எண்ணத்திலிருந்துமாற்றவேண்டும்.

தமிழ் நாட்டில் மறைமுகமான பேருந்து கட்டண உயர்வு ...



தமிழ் நாட்டில் ஒரு புத்திசாலிதனமானபஸ் கட்டண உயர்வை செய்துவிட்டுநமது முதல் அமைச்சர் அழகாக ஒருபேட்டி கொடுத்து இருக்கிறார்.அதில் டீசல்பெட்ரோல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பஸ் கட்டண உயர்வு இல்லைஎன்று.சென்னையில் தற்போது ஓடிகொண்டிருக்கும் சொகுசு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணமே ஐந்துரூபாய்.பெரும்பாலான பேருந்துகள் இந்த சொகுசு பேருந்துகளே.ஐந்து சொகுசுபேருந்து வந்தால் ஒரு சாதாரண பேருந்து வருகிறது .அவசரமாக அலுவலகம்செல்ல வேண்டிய சாதாரண நடுத்தர வகுப்பு பயணிகள் என்ன செய்வார்கள்வேறு வழி இல்லாமல் இந்த சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்இப்படியெல்லாம் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்திவிட்டு என்னபேட்டி வேண்டியிருக்கு ?

சும்மா பேருக்குத்தான் இவை சொகுசு பேருந்துகள்.இவை சாதாரண பேருந்துகள்போல் நெரிசலுடன் எல்லா நிறுத்தங்களிலும் நின்று தான் செல்கின்றன.ஆனால்நமது முதல்வரின் புத்திசாலித்தனமான கவிதைதனமான பதில்கள் எப்படிபாமரனுக்கு புரிய போகிறது.புரிந்தாலும் இவர்கள் அவனை பணம் கொடுத்துவாங்கி விடுவார்கள் .

இவர்களிடம் இதுபற்றி கேட்டால் அடுத்த மாநிலத்தை ஒப்பீடுசெய்கிறார்கள்.அந்த மாநிலத்தின் மக்கள் வருமானம் வேறு அவர்கள் வாழ்க்கைமுறை வேறு.அந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் வேறு.அந்த மாநிலத்தில்டாஸ்க்மாக் வருமானம் கொட்டவில்லை .ஆகையால் ஆட்சியாளர்கள்இங்கிருக்கும் சாதாரண மக்களின் நிலையை சிந்தித்து பார்க்கவேண்டும்சென்னை நகர பேருந்துகள் இப்படி என்றால் வெளியூர் பேருந்துகளை பற்றிசொல்லேவே வேண்டாம்.அந்த அளவிற்கு படுமோசமான பேருந்துகளை இயக்கிவருகிறது அரசு விரைவு பேருந்து கழகம் .மார்த்தாண்டம் மற்றும் சென்னைக்குஅரசு விரைவு பேருந்து கழகம் அல்ட்ரா டீலக்ஸ் ,சூப்பர் டீலக்ஸ் மற்றும்குளிர்சாதன பேருந்து என இயக்கி வருகிறது.

இதில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு குளிசாதன பேருந்தில் பயணம்செய்யும் பாக்கியம் எனக்கு கிட்டியது.
பேருந்துகட்டணம் அறுநூற்றி நாற்பது ரூபாய்.பராமரிப்பு இல்லாததால்இருக்கைகளில் முழுக்க தூசி.பேருந்து ஓட ஆரம்பித்ததும் ஒரே குலுக்கலுடன்பயணிக்க ஆரம்பித்தது .சொகுசு பயணம் என்று நினைத்த எனக்கு அன்றையபயணம் முழுதும் நரக பயணம் என்று ஆகி விட்டது.இவ்வளவு அதிக பயணகட்டணம் கொடுத்து இதில் பயணம் செய்வதற்கு பதில் சாதாரண பேருந்தில்பயணம் செய்யலாம்.இவர்கள் இரவு உணவிற்காக நிறுத்தும் சிற்றுண்டிசாலைகளின் நிலையை சொல்வே வேண்டாம்.இருப்பதிலே மட்டமானசிற்றுண்டி சாலைகளில் நிறுத்துகிறார்கள்.அதிகமாக ரூபாய் செலவு செய்துசுகாதாரமற்ற உணவை சாபிடுவதோடு நோய்களுக்கும் ஆளாகின்றனர்பயணிகள்.

சரி எல்லாம் இருக்கட்டும்,சரியான நேரத்திற்கு சென்னைக்கு வந்து சேருகிறதா? அதுவும் இல்லை.சாதாரணமாக புறவழி சாலையில் பயணிக்க வேண்டிய இந்தவிரைவு மற்றும் சொகுசு பேருந்துகள் எல்லா ஊர் பேருந்து நிலையங்களுக்கும்சென்று சாதாரண பேருந்துகளில் ஆள் ஏற்றுவதுபோல் கூவி கூவிஅழைகிறார்கள்.இதனால் பயண நேரம் அதிகமாவதோடு திட்டமிட்டபடிநேரத்திற்கு வந்து சேர முடியவில்லை.

இந்த லட்சணத்தில் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று சொல்லி பேருந்துகட்டணத்தை உயர்த்துவதாக முதல்வர் சொல்லி இருந்தால் வரும் தேர்தலில்காணமல் போயிருப்பார்.எனவே இருக்கின்ற பேருந்துகளை சரியானபராமரிப்பில் இயக்கினாலே மக்கள் மனம் குளிரும் ..... . . .