தேவையற்ற பொதுத் தேர்வு முறை
நாம் சொல்லிக் கொடுத்ததை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொண்டார்களா என்பதை அறிய ஏதோ ஒரு காலத்திலஅந்த மாணவர்களை ஒரு தாளில் எழுதிக்காட்டினால்தான் அந்த மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், அதாவது தேர்ச்சி பெறுவார்கள். சிலர் ஒரு சில பக்கங்கள் எழுதி தேர்ச்சி அடைவார்கள். 40க்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதி தேர்வு பெறாதவர்களும் இருக்கிறார்கள். தேர்வு மையத்தில் பல மணி நேரங்கள் அமர்ந்து வெற்றுத்தாளினை கொடுத்து வெளியே வந்தவர்களும் இருக்கிறார்கள். மிகவும் பிரமாதமாக எழுதி 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் அளவுக்கு எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.
தேர்வு தொடங்குமுன் மட்டும் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதியிட்டு. விழுந்து விழுந்து கோயிலுக்கு போய் கும்பிட்டு தேர்வு எழுதுபவர்கள் இன்று அனேகம் பேர். டஹல்ங்ழ் இட்ஹள்ங் செய்ய ஆட்கள் இருக்கும் போது நாம் எதற்கு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என ஜாலியாகவும் பலர் இருப்பர். இதற்கும் மேலே ஒரு படி போய், சில பள்ளிகள் தேர்வு நேரங்களில் கேட்டை பூட்டி, ஆய்வாளர்களை நன்கு கவனித்து, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விடைகளை பார்த்து எழுதிக் கொள்ளுங்கள் என வழி செய்து கொடுக்கும் நல்லதொரு பள்ளிகளும் இருக்கின்றன. இந்த வசதி இந்த பள்ளியில் இருக்கிறது என அறிந்து அதைப் போல பள்ளியினைக் கண்டு அதில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களும் இங்கே அதிக அளவில் இருக்கிறார்கள் என்றும் விவாதிக்கப்படுகிறது.
விடைகளை கரும்பலகையில் எழுதிப் போட்டு யாராவது வருவதற்குள் சீக்கிரம் எழுதிக் கொள்ளுங்கள் என ஒரு அருமையான சூழலுடன் இயங்கும் பள்ளிகளும் அதிக அளவில் இருக்கின்றன.
பீகார் போன்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது பாருங்கள். ஒரு அளவேயில்லை, அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. தங்களை காப்பியடிக்க விடவில்லை என பல மாணவர்கள் அந்த பள்ளியையே அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேற்படிப்பிலும் ஏறக்குறைய இதே கதைதான். சில ஊர்களில் உள்ள கல்லூரிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் சுலபம், ஏனெனில் அங்கே உள்ள அலுவலர்களே இந்தக் காரியங்களை செய்ய காத்துக் கொண்டு இருப்பார்கள். இதனால் 200 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தெல்லாம் இதைப்போல ஊர்களிலுள்ள கல்லூரிகளில் வந்து தேர்வு எழுதுவார்கள்.
இதுபோன்ற அவலங்களை எழுதிக் கொண்டே போகலாம். கள்ள வோட்டு போடுவதில்லையா, அது போல இதுவும் ஒன்று, அவ்வளவுதான். எந்த வேலைக்கு போனாலும் லஞ்சம் கொடுக்கிறோமில்லையா, அது போலத்தான் இதுவும்.
சமீபத்தில் இரண்டு மாணவர்களை ஒரே நேரத்தில் சந்திக்க நேர்ந்தது. உண்மையிலேயே சிரத்தையுடன் படித்து ஒரு மாணவர் 1200க்கு 1120 மதிப்பெண்களையும், மற்றொரு மாணவர் மிக மிக சாதாரணமாக படித்து, பள்ளியின் தயவால் மட்டுமே 1200க்கு 1148 மதிப்பெண்கள் பெற்றதையும் காண நேர்ந்தது. இங்கே நான் குறிப்பிடுவது இந்த இரண்டு மாணவர்களை பற்றி மட்டுமே, ஒரு மொத்த மாணவ சமுதாயத்தை பற்றியது அல்ல.
வேறொரு கோணத்தில் இதைப் பார்த்தோமானால், இப்படி மாணவர்களை தேர்வு எழுதி வைத்துத்தான் மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்க வேண்டுமென்பதில்லை. புல கோணங்களில் மாணவர்களின் திறனை அறிய ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கின்றன, இதை நான் பல முறைசொல்லியிருக்கிறேன்.
தேர்வுகளில் ஆள் மாறாட்டம் எல்லாம் செய்து தேர்ச்சி பெறுகிறார்கள். இன்றளவும் நம் நாட்டில் இதைப்போல தேர்வுகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நம்மில் நாணயமின்மை தான் இதற்கு காரணம். நேர்மையின்மை தான் காரணம். இவைடியல்லாம் நமக்கு தேவையில்லை என தீர்மானித்து விட்டோம். நாமே இப்படி நினைத்து விட்டால், அடுத்து சந்ததியினர் இதைவிட மோசமாக அல்லவா இருப்பார்கள் ?
அதனால்தான் மீண்டும் சொல்கிறேன்....
இந்த தேர்வு முறையை முற்றிலும் தவிர்ப்போம். அறிஞர் குழுக்களை அமைத்து வேறு வழிகளை காண்போம். புதியன ஆயிரம் பிறக்கும்.
ஒரு முறைஎழுதுவதும் ஒன்று, 11 தடவை படிப்பதும் ஒன்று என ஒரு சொல் உள்ளது. ஆனால் ஒரு தடவை செய்முறையில் ஈடுபடுவது 25 முறைகள் எழுதுவதற்கு சமம்.
தேர்வு எழுதும் கதை ஒருபுறம் இருக்க, மற்றொன்றும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. அதாவது நம் கல்வி முறையில் விடைத்தாள்களை திருத்துவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகும். திருத்துவதற்கு ஆள் கிடைக்காது. பொதுவாக அந்தந்த பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் விடைத் தாள்களை திருத்த வேண்டும். ஆள் கிடைக்காத சமயத்தில் கதை ஆந்த சமயத்தில், அந்தந்த பாடவேறு மாதிரியாகி விடும். கீ என்றஒன்றைவைத்துக் கொண்டு. திருத்த வேண்டிய நிலை. இந்த இடத்தில் பாட சம்பந்தமாக எதுவுமே தெரியவில்லை யென்றாலும் இந்த விடைத்தாள்களை யாராலும் திருத்த முடியும், அதற்காகத்தான் இந்த கீ. குறிப்பிட்ட பாயிண்டுகளை எழுதியிருந்தால் போதும், அதற்கு மார்க் உண்டு, அதற்காகத்தான் இந்த கீ.
ஆங்கிலமே தெரியாதவர்கள் மாணவர்களின் ஆங்கில விடைத்தாள்களை திருத்துகிறார்கள். கணக்கே தெரியாதவர்கள் கணக்கு விடைத்தாள்களை திருத்துகிறார்கள். திருத்துவதற்கு ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. இதில் மாணவர்களின் தலையெழுத்தைத் தான் எண்ணி வருத்தப்பட வேண்டும். இதைப் போல தவறுகள் நடைபெறுவதாலேயே, கல்வித்துறை, மாணவச் சமுதாயம் ஏமார்ந்து விடக்கூடாது என்பதற்காக, விடைத்தாள்களின் செராக்ஸ் காப்பியை தேர்வு முடிந்ததும், தேவையெனில் பணம் செலுத்தி பெற்று, அதில் திருத்தியதில் ஏதாவது தப்பி இருக்கிறதா என்றறிய ஒரு ஏற்பாட்டினை செய்திருக்கிறது.
இந்த தேர்வு முறை களைந்தெறியப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன்.
Courtesy : Vadakku vaasal